மித்ரா ஆதரவில் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

ஈப்போ, டிச.7-

கடந்த ஆறு மாதங்களாக மித்ரா தலைமையில் தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சித் திட்டம் பேராக் இந்திய வர்த்தக சபை ஆதரவில் நடைபெற்றது. இப்பயிற்சி கோட்பாடு மற்றும் நடைமுறை அடிப்படையில் நடைபெற்றது. இப்பயிற்சியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவியும் வழங்கப்பட்டதாக இந்நிகழ்வில் கலந்துகொண்டபோது மித்ராவின் ஒருங்கிணைப்பாளரான பி.பிரபாகரன் கூறினார்.

இப்பயிற்சி கோட்பாடு மற்றும் நடைமுறை அடிப்படையில் நடந்தேறியது. இதன் வாயிலாக தொழில்முனைவோர் திறம்பட செயல்பட ஏதுவாக அமையும். ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக்கொண்டு நமது இந்திய மகளிர்கள் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள இது வழிவகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

இப்பயிற்சியில் மீன் மற்றும் கோழி வளர்ப்பு திட்டம், உணவகத்தை செயல்படுத்துவது, சேலைகள் நேரடி விற்பனை, முடிதிருத்தும் நிலையம், பிரத்யேக வகுப்பு போன்ற தொழில்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. தொழில் செய்வதற்கு முதலீடு செய்யப்பட வேண்டும். அதன் அடிப்படையில் இப்பயிற்சியை மேற்கொள்ளும் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.




மித்ராவின் நிதியுதவி வாயிலாக இந்த தொழில்முனைவோர்கள் தங்களின் சிறுதொழில் வியாபாரத்தை தொடங்கலாம். இந்த வியாபாரத்தொழிலில் வெற்றி காணும் வரை மித்ரா குழுவினர் கண்காணித்து தேவையான உதவிகளை வழங்கி வருவார்கள் என்று அவர் உறுதியளித்தார்.

அதோடு மட்டுமன்றி 600 இந்திய முதலாளிகளை உருவாக்கும் திட்டம் விரைவில் அமலாக்கம் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தில் பங்குபெறும் தொழில்முனைவர்களுக்கு தங்கள் தொழிலை தொடங்க 20 ஆயிரம் ரிங்கிட்டை மித்ரா வழங்கவுள்ளது. அத்திட்டத்தில் இடம்பெற பதிவு செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக்கொண்டார்.

மலேசியாவிலுள்ள அனைத்து இந்திய விளையாட்டு சங்கங்கள் உதவிகள் கிடைக்கப்பெற மித்ராவில் மனு செய்யும்படி வரவேற்கப்படுகின்றனர். மித்ராவின் அகப்பக்கத்தில் பதிவு செய்து முறையாக கேட்கப்பட்ட குறிப்புகளுக்கு விளக்கமளிக்க வேண்டும். அந்த இயக்கங்கள் தங்களின் வருடாந்திர நடவடிக்கை குறிப்பு மற்றும் தேவைப்படும் நிதி குறித்து மனு செய்யும்படி அவர் விளக்கமளித்தார்.




பேராக் வர்த்தக சபை மித்ராவுடன் இந்த நிகழ்வினை ஒருங்கிணைந்து செய்து வருவதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று பேராக் வர்த்தக சபை தலைவர் பா.ரவிசங்கர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *