சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் படத்திற்கு மதராஸி எனும் டைட்டில் வெளியீடு!

- Muthu Kumar
- 18 Feb, 2025
நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய 40வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் மாற்று சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.குறிப்பாக, நடிப்புக்கு இலக்கணமாக திகழும் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக சிவகார்த்திகேயன் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்திருக்கும் படத்திற்கான தலைப்பு நேற்று வெளியானது.
அதன்படி இந்த படத்திற்கு மதராசி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தலைப்புடன் சேர்த்து படத்தில் சிவகார்த்திகேயன் லுக் குறித்த டீசரும் வெளியாகியுள்ளது. டீசரில் சிவகார்த்திகேயன் சீரிஸான ஒரு லுக்கில் இருக்கிறார். அத்துடன் சில காட்சிகளும் த்ரில்லர் படம் பார்க்கும் அனுபவத்தை நமக்கு கொடுக்கிறது. எனவே, இதனை வைத்து பார்க்கையில் படம் நிச்சயமாக வித்தியாசமான கதைக்களத்தை வைத்து எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என தெரிகிறது.
கடைசியாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து தர்பார் படத்தினை இயக்கி இருந்தார். இந்த படம் மக்களுக்கு மத்தியில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை பெறவில்லை. எனவே, இதனை தொடர்ந்து எந்த படத்தையும் இயக்காமல் இருந்த ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இந்த படத்தினை இயக்கி வருவதால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாகியுள்ளது. கண்டிப்பாக இந்த படம் அவருக்கு கம்பேக் படமாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *