அஜீத்தின் குட் பேட் அக்லீ திரைப்படம் வரும் ஏப்ரல் 10 அன்று வெளியீடு

top-news
FREE WEBSITE AD

தமிழில் திரிஷா இல்லனா நயன்தாரா, மார்க் ஆண்டனி என பெரிய வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது நடிகர் அஜித் குமாருடன் குட் பேட் அக்லீ என்ற படத்தை இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இபபடத்தை வழங்குகிறது.

தேவிஸ்ரீ பிரசாத் இசையில், அபிநந்தன் ஒளிப்பதிவில், விஜய் வேலுக்குட்டி எடிட்டிங்கில் படம் உருவாகி வருகிறது. 2025 ஏப்ரல் அல்லது மே மாதம் இப்படம் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டு படப்பிடிப்புகள் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகின்றன.300 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படம், அஜித் ரசிகர்களுக்கு திரை விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் அஜித்தின் 63வது திரைப்படமான இப்படத்தை ரசிகர்கள் பெருமளவு எதிர்பார்த்து வருகின்றனர். பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட பல மொழிகளில் வெளியாகிறது.

இந்நிலையில், கோடை விடுமுறையை முன்னிட்டு, குட் பேட் அக்லீ திரைப்படம் 10 ஏப்ரல் 2025 அன்று வெளியிடப்படுவதாக, படத்தின் தயாரிப்புக் குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. மார்க் ஆண்டனி மூலமாக மிகப்பெரிய வெற்றியை கொடுத்த ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் குமாருக்கு மங்காத்தா திரைப்படத்தை போல மிகப்பெரிய வெற்றியை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *