இத்தாலியில் நடந்த கார் ரேசிங் போட்டியில் மீண்டும் அஜித் குமார் அணி வெற்றி!

- Muthu Kumar
- 24 Mar, 2025
நடிகர் அஜித் குமார் தனது பெயரில் அஜித் குமார் ரேசிங் என்ற பெயரில் கார் ரேஸ் அணியைக் கட்டமைத்து, 24 மணி நேர கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகிறார்.
அஜித் குமார் ரேசிங் அணி, நேற்று மார்ச் 23ஆம் தேதி இத்தாலியில் உள்ள முகெல்லோ 12H ரேஸில் அஜித் குமார் ரேசிங் அணி மூன்றாவது இடத்தை வென்று அசத்தியுள்ளது. அஜித்குமாருக்கு இத்தாலியில் உள்ள அவரது ரசிகர்கள் ரேஸ் நடக்கும் இடத்திற்கே வந்து ஆதரவு தெரிவித்தார்கள்.
கார் ரேஸில் மூன்றாவது இடத்தை வென்ற பின்னர், தனது குழுவினருடன் இணைந்து கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தார். அப்போது தேசிய கொடியுடன் இருந்த அஜித்குமாரை அவரது அணியைச் சேர்ந்த கார் ரேஸ் வீரர்கள் மட்டும் இல்லாமல், இரண்டாவது இடம் பிடித்த கார் ரேஸ் வீரர்களும் இணைந்து ஷேம்பைனால் குளிப்பாட்டிவிட்டார்கள்.
அதன் பின்னர் தன்னைப் பார்க்க காத்துக் கொண்டிருந்த ரசிகர்களிடம் அஜித் குமார், தனது அணி வென்ற மூன்றாம் இடத்திற்கான கோப்பையை எடுத்துக் கொண்டு போய்க் காட்டினார். இதனைப் பார்த்த ரசிகர்கள் உற்சாக வெள்ளத்திற்கு சென்றனர் எனலாம். அதன் பின்னர் ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், அஜித்தை பாராட்டி வருகிறார்கள்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *