கலவரத்தில் ஈடுபட்ட இரு கும்பல்! 9 பேர் கைது!

top-news

ஜூன் 25,


உணவகம் ஒன்றில் இரு கும்பலுக்கிடையில் கைகலப்பு ஏற்படும்படியானக் காணொலி சமூகவலைத்தளங்களில் பரவியதை அடுத்து கைகலப்பில் ஈடுபட்டதாக நம்பப்படும் 9 பேர் இன்று காவல் நிலையத்தில் சரணடைந்ததாக Papar மாவட்டக் காவல் ஆணையர் Kamaruddin Ambo Sakka தெரிவித்தார். உணவகப் பணியாளர்களான பாக்கிஸ்தான் தொழிலாளர்களுக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையில் கடந்த 1 மாதமாகக் கருத்து முரண் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

உள்ளூர் நபருக்குச் சொந்தமான மறுசுழற்சி மையத்தில் பாக்கிஸ்தானிய உணவகப் பணியாளர் பொருள்களை விற்கும்போது மறுசுழற்சி மையத்தின் உரிமையாளர் குறைவான தொகையை வழங்கியதும் முதல் முறை வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் நேற்று Kinarut பகுதியில் உள்ள உணவகத்தில் பாக்கிஸ்தானிய தொழிலாளர்களுடன் அதே உள்ளூர் ஆடவர் சந்தித்த போது கைகலப்பு ஏற்பட்டதாகவும் Papar மாவட்டக் காவல் ஆணையர் Kamaruddin Ambo Sakka தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 19 முதல் 50 வயதுக்குற்பட்ட 9 பேரையும் தடுப்புக் காவலில் வைத்துக் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருவதாக Papar மாவட்டக் காவல் ஆணையர் Kamaruddin Ambo Sakka தெரிவித்தார்.


Kekecohan antara dua kumpulan di sebuah restoran tular di media sosial membawa kepada penyerahan diri 9 individu ke balai polis. Perselisihan antara pekerja restoran warga Pakistan dan penduduk tempatan telah berlarutan sebulan. Polis meneruskan siasatan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *