பிரதமரின் செய்தியைத் தவிர்ப்பதா? மெட்டாவுக்குக் கண்டனம்!
- Shan Siva
- 16 May, 2024
கத்தாரில் ஹமாஸ்
தலைவர் இஸ்மாயில் ஹனியேவை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்தது தொடர்பான செய்திகளைத் தவிர்க்க நினைக்கும் சமூக ஊடகமான மெட்டா-வின் நடவடிக்கைக்குத் தகவல்
தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சில் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மெட்டா நிறுவனத்தின் இந்நடவடிக்கை இந்த நாட்டில் ஊடக சுதந்திரத்திற்கான உரிமையை மீறும் வகையில் இருப்பதாக ஒற்றுமை அரசின் பேச்சாளருமான அவர் கூறினார். இதனை அடுத்து, இது குறித்து விளக்கம் கோரி மெட்டாவுக்குக் கடிதம் அனுப்பப்படும் என்று அவர் கூறினார்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவர் ஹனியே இடையேயான கத்தார் சந்திப்பு தொடர்பான பதிவுகள் க மெட்டாவிலிருந்து நீக்கப்பட்டதாகத் தனது அலுவலகத்திற்கு தகவல் வந்தததை சுட்டிக்காட்டிய ஃபஹ்மி, பிரதமர் கத்தாருக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டு அங்குள்ளத் தலைவர்களைச் சந்தித்தது முக்கியமான செய்தி என்றபோதிலும் அதைத் தவிர்க்க நினைப்பது கண்டனத்திற்குரியது என அவர் எச்சரித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *