ஊடக மேம்பாட்டுக்கு 1.5 மில்லியன் நிதி! - Teo Nie Ching உறுதி!

top-news
FREE WEBSITE AD

தொடர்பு அமைச்சின் கீழ் இயங்கும் துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் நிறுவனம் (இப்தார்) மூலம் அமைச்சு இவ்வாண்டும் ஊடகம் மற்றும் ஒளிபரப்பு தொடர்பான 70க்கும் மேற்பட்ட பயிற்சிகளை ஏற்பாடு செய்ய ரி.ம 1.5 மில்லியன் ஒதுக்கியுள்ளதாக தொடர்பு அமைச்சின் துணையமைச்சர் Teo Nie Ching 
 
இதில் 18 செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு பயிற்சிகள் உள்ளடக்கியதாக தொடர்பு துணையமைச்சர்  Teo Nie Ching கூறினார். அவை அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் இருக்கும் அனைத்து ஊடக பயிற்சியாளர்களும் கலந்து கொள்ளலாம்.
 
"அரசு ஊழியர்களுக்கு, பதிவு ரி.ம 30, அதே சமயம் தனியார் துறையினருக்கான பதிவு அவர்கள் தேர்வு செய்யும் பயிற்சிகளைப் பொறுத்தது," என்று அவர் கூறினார்.
 
தலைகநகரில், நுண் நற்சான்றிதழ்கள் 2024 கல்வி மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அமைச்சின் முயற்சிகளில், ஊடகப் பயிற்சியாளர்கள் சமீபத்திய தொழில்நுட்பத்தைக் கற்றுக் கொள்ளவும், பின்னர் அதைத் தங்கள் ஊடகப் பணியில் செயல்படுத்தவும் இது உதவும் என  Teo Nie Ching  நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *