விபத்தில் 3 குழந்தைகள் படுகாயம்! ஒருவர் பலி!

- Sangeetha K Loganathan
- 25 Jun, 2025
ஜூன் 25,
கட்டுப்பாட்டை இழந்த லாரி HILUX வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் HILUX வாகனமோட்டி உட்பட மூன்று குழந்தைகளும் படுகாயம் அடைந்ததாகச் சரவாக் மாநில மீட்பு ஆணையச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இன்று பிற்பகல் 3.32 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டதாகப் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தும் Kota Samarahan மீட்பு ஆணைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையிலிருந்த தடுப்புச் சுவரை மீறி எதிரில் வந்துக்கொண்டிருந்த HILUX வாகனத்தை மோதியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்த லாரி ஓட்டுநர் இன்னும்ம் அடையாளம் காணப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட HILUX வாகனமோட்டியும் HILUX வாகனத்திலிருந்த 3 குழந்தைகளும் கூச்சிங் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிகிச்சைக்குப் பின்னர் காவல்துறையினர் விசாரணை மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah lori hilang kawalan lalu merempuh kenderaan HILUX menyebabkan pemandu lori maut di tempat kejadian. Pemandu HILUX dan tiga kanak-kanak cedera. Mangsa kini dirawat di Hospital Kerajaan Kuching, Sarawak. Polis sedang menjalankan siasatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *