உலு திராம் சம்பவம்..... ஜொகூர் சுற்றுலாப் பயணிகளைப் பாதிக்கவில்லை!

top-news
FREE WEBSITE AD

 உலு திராம் காவல் நிலையத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து மாநில சுற்றுலாத் துறை எதிர்மறையான தாக்கத்தை சந்திக்காது என்றும், மலேசியா மற்றும் சிங்கப்பூர் பள்ளிகள் விடுமுறைகளில்  இருப்பதனால், இங்குள்ள ஹோட்டல்கள் நல்ல முன்பதிவுகளோடு செயல்படும் என்று  மலேசியன் அசோசியேஷன் ஆஃப் ஹோட்டல் ஜோகூர்  தலைவர் இவான் தியோ கூறினார்.

சமீபத்தில் உலு திராம் காவல் நிலையத்தில் நடந்த தாக்குதல் ஒரு சம்பவம் மட்டுமே, இந்த சம்பவம் ஜோகூர் சுற்றுலாத் துறையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாது. சிங்கப்பூர் பள்ளி விடுமுறைகள் மே 25 ஆம் தேதி தொடங்கப்படுவதால், இது மலேசியாவின் பள்ளி விடுமுறை நாட்களுடன் ஒத்துப்போகிறது, ஜோகூரில் உள்ள ஹோட்டல்களில் நல்ல எண்ணிக்கையிலான மக்களை எதிர்பார்க்கிறோம் என்று நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின் பொழுது தியோ கூறினார்.

சிங்கப்பூர் அதிகாரிகள் தங்கள் எல்லையில் எடுத்த இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும்  கோவிட் -19 வழக்குகள் அதிகரித்ததைப் பற்றி கேட்டதற்கு, இது சிங்கப்பூரர்களை ஜோகூருக்கு பயணிப்பதைத் தடுக்காது என்று தியோ கூறினார். காரணம், சிங்கப்பூரில் வாழ்க்கைச் செலவு மிக அதிகமாக உள்ளது. மேலும் இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம் மற்றும் குறிப்பாக ஜோகூர் ஆகிய இடங்களில் சிங்கப்பூரர்கள்  பயணிக்க விரும்புகிறார்கள்.

சீனாவிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் விசா தள்ளுபடியைப் பயன்படுத்தி ஜோகூருக்குச் சென்று இங்குள்ள ஹோட்டல்களில் தங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று தியோ கூறினார்.

ஜொகூர் சுற்றுலா வழிகாட்டிகள் சங்கத்தின் தலைவர் ஜிம்மி லியோங் கூறுகையில், வெள்ளிக்கிழமை காவல் நிலையம் மீதான தாக்குதல் ஒரு தனிப்பட்ட வழக்கு, இது சுற்றுலாப் பயணிகளின் வருகையை பாதிக்காது என்று  ஜிம்மி லியோங் கூறினார்.

மேலும், இந்த சம்பவம் நகரின் முக்கிய  பகுதிக்குள் இல்லாமல் ஜோகூர் பாருவின் புறநகரில் நடந்தது.இந்த விஷயத்தில் அதிகாரிகள் தொடர்ந்து புது தகவல்களை  வழங்குவது முக்கியமானது. இது என்ன நடந்தது என்பது பற்றிய கூடுதல் தெளிவைத் தெரிந்துகொள்ள மக்களுக்கு உதவும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த சம்பவம் நடந்த போதிலும், பெரிய சுற்றுலா குழுக்கள் எதுவும் தங்களது சுற்றுலா முன்பதிவுகளை ரத்து செய்யவில்லை, இது சுற்றுலாத்துறைக்கு நல்லது என்று லியோங் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *