அமேசான் வெப் சர்வீசஸ் நாட்டின் ஜிடிபி-யை உயர்த்தும்! - பிரதமர் நம்பிக்கை!
- Shan Siva
- 27 Sep, 2024
கோலாலம்பூர்: அமேசான் வெப் சர்வீசஸ் (AWS) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) ரிங்கிட் 57.3 பில்லியன் பங்களிப்பை 2032 ஆம் ஆண்டிற்குள் அடைய முடியும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Amazon.com இன் கிளவுட் கம்ப்யூட்டிங் பிரிவான AWS, 2038 ஆம் ஆண்டுக்குள் சுமார் 6.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM29.2 பில்லியன்) முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்த புதிய AWS பிராந்தியத்தின் கட்டுமானம் மற்றும் செயல்பாடு மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 12.1 பில்லியன் அமெரிக்க டாலர்களை (RM57.3 பில்லியன்) சேர்க்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2038 ஆம் ஆண்டு வரை சராசரியாக 3,500 க்கும் மேற்பட்ட முழு நேர வேலைக வாய்புகளை வழங்குன் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024 மற்றும் 2038 க்கு இடையில் AWS மலேசியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மலேசிய ரிங்கிட் 57.3 பில்லியனுக்கும் அதிகமாக உயர்த்தும் என்று நம்புவதாக, AWS இன் பொருளாதார தாக்கம் குறித்த அறிக்கையை வெளியிடும் போது அன்வர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *