குடிநுழைவு விவகாரங்கள் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டும்!

- Muthu Kumar
- 06 Jul, 2025
புத்ராஜெயா, ஜூலை 6-
குடிநுழைவு விவகாரங்கள் தொடர்பான சேவையை நிர்வகிக்க, மலேசிய குடிநுழைவுத் துறை, எந்தவொரு தனிநபரையும் முகவராக நியமித்ததில்லை. மாறாக, தொடர்புடைய அனைத்து விவகாரங்களும் குடிநுழைவு அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக மேற்கொள்ளப்பட வேண்டும். குடிநுழைவு தொடர்பான விவகாரங்களை குறுக்கு வழியில் தீர்த்து வைப்பதாக உறுதியளிக்கும், சமூக ஊடகங்களின் விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் எளிதில் ஏமாற்றமடைய வேண்டாம் என்று குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ ஸக்காரியா ஷாபான் அறிவுறுத்தினார்.
இதுபோன்ற விவகாரங்களில் குடிநுழைவுத் துறை சமரசம் காணாது என்றும், சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதற்கு முன்னதாக மோசடி மேற்கொள்வதாக கண்டறியப்படும் சமூக ஊடக கணக்குளைக் கண்காணித்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் டத்தோ ஸக்காரியா குறிப்பிட்டிருந்தார்.
நுழைவு, வெளியேற்றம் தொடர்பான சேவைகளை வெளிப்படையாக ஊக்குவிக்கும் பல சமூக ஊடக கணக்குகள் இருப்பது, குடிநுழைவுத் துறை செயல்முறையிலிருந்து கறுப்புப்பட்டியல் நிலையை நீக்குவது, சட்டவிரோத குடியேறிகள் உட்பட வெளிநாட்டினருக்குப் போலியான மனிதவள் மறுசீரமைப்பு திட்டத்திற்கான விண்ணப்பங்களை வழங்குவது போன்ற நடவடிக்கைகளை குடிநுழைவு துறை கடுமையாக கருதுவதாக, அவர் கூறினார்.
சம்பந்தப்பட்ட சமூக ஊடக கணக்குகள் வழங்கும் ஒவ்வொரு சேவைக்கும் குறிப்பிட்ட ஒரு கட்டணத்தை வசூலிப்பது, முதற்கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டதாக, டத்தோ ஸக்காரியா குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, அவர்களின் அச்செயல் மோசடி என்றும், சட்டவிரோதமாக லாபம் ஈட்டுவதற்கு குடிநுழைவுத் துறை என்ற பெயரைப் பயன்படுத்தி பொதுமக்களை ஏமாற்றும் முயற்சி என்றும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் குடிநுழைவு முறையில் பொதுமக்களின் நம்பிக்கையைச் சீர்குலைக்கும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிரான அமலாக்கம், கண்காணிப்பு முயற்சிகளை உள்துறை, குடிநுழைவு அமைச்சின் மூலம் மடானி அரசாங்கம் தொடர்ந்து தீவிரப்படுத்தும் என்றும் ஸக்காரியா கூறினார்.
Jabatan Imigresen Malaysia menegaskan tiada ejen dilantik untuk urusan imigresen. Semua urusan mesti dibuat secara rasmi di pejabat imigresen. Orang ramai diingatkan jangan mudah tertipu dengan iklan di media sosial yang menawarkan perkhidmatan palsu berkaitan imigresen dan urusan pemutihan pendatang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *