பினாங்கில் அங்கீகரிக்கப்படாத வணிகக் கடைகள் தகர்ப்பு!

- Muthu Kumar
- 25 Jun, 2025
(ஆர்.ரமணி)
பினாங்கு, ஜூன் 25-
பினாங்கு மாநிலத்தில் அங்கீகரிக்கப்பாடத வணிகக் கடைகளுக்கு எதிராக, மாநகர் மன்றத்தின் கட்டாய அமலாக்கப் பிரிவினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு அவற்றை தகர்க்கும் கடுமையான செயல்களை இங்கு நிகழ்த்தி வருகின்ற போதிலும், இன்னமும் பலர் அத்துமீறும் விதத்தில் செயல்படும் ஆணவப் போக்கிற்கு தகுந்தப் பாடம் புகட்டப்பட்டு வருகிறது.
அவ்வண்ணம் மாநகர் மன்றத்தின் வணிக உரிமப் பிரிவினரின் ஒத்துழைப்புடனும், இங்குள்ள பெருநிறுவன, சமூக மேலாண்மைத்
துறையினரின் துணையுடனும் அத்தகைய கடைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு, மாநில குடிநீர் வாரியம், மின்சார வாரியம் ஆகிய தரப்புகளின் அதிகாரிகள் மற்றும் மாநிலக் காவல் துறையினரின் பெரும் பங்களிப்பு ஆகியவை, பக்க பலமாக துணை நிற்பதால் தகர்ப்புப் பணிகள் இங்கு முழு வீச்சில் தொடர்ந்து நிகழ்த்தப்படுகின்றன.
மாநகர் மன்றத்தின் 1979ஆம் ஆண்டு துணைச் சட்டங்கள் மற்றும் 1974ஆம் ஆண்டின் சாலைகள், சாக்கடைகள் மற்றும் கட்டடங்களுக்கான விதிமுறைகளின் கீழ், வணிக உரிமம் இல்லாத கடைகளுக்கு எதிரான துடைத்தொழிப்புப் பிரிவினர், கால தாமதமின்றி, இங்கு உடனுக்குடன் நடத்துகின்ற துரிதப் பணிகள் பரவலாக மேற்கொள்ளப்படும் காட்சிகள் வாடிக்கையாக நிகழ்கின்றன.
Majlis Bandaraya Pulau Pinang bertindak tegas terhadap premis perniagaan tanpa lesen dengan kerjasama pelbagai agensi termasuk polis, syarikat air dan elektrik. Operasi meroboh dan penguatkuasaan giat dijalankan mengikut undang-undang tempatan bagi menangani kegiatan berlesen haram.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *