மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு செம்பனை எண்ணெய் ஏற்றுமதி அதிகரிப்பு!
- Muthu Kumar
- 15 May, 2024
ஏப்ரல் மாதத்தில் மட்டும் மலேசியாவில் இருந்து 285,829 டன் செம்பனை எண்ணையை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மலேசியாவில் இருந்து இந்தியா 285,829 டன் செம்பனை எண்ணையை இறக்குமதி செய்ததன் மூலம் ஏப்ரல் மாதத்திற்கான நாட்டின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் 21.6 % அதிகரித்துள்ளது.
மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதில் 50,181 டன்கள் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் வாசனை நீக்கப்பட்ட (RBD) பாமோலின் மற்றும் 227,649 டன் கச்சா பாமாயில் (CPO) ஆகியவை இதில் அடங்கும்.
ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவிற்கு சமையல் எண்ணெய் இறக்குமதி 1.3 மில்லியன் டன்கள் ஆகும், இது கடந்த மாத அளவை விட கிட்டத்தட்ட 13.5 சதவீதம் அதிகமாகும் என்று தொழில் குழுவான Solvent Extractors 'A தகவல்கள் வெளியிட்டுள்ளது. கடந்த மாத இறக்குமதியில் செம்பனை எண்ணையின் பங்கு 52 சதவீதமாக இருந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *