அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு பல லட்சம் லாபம்!

top-news
FREE WEBSITE AD

அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அறிமுகம் செய்துள்ள புதிய மசோதா காரணமாக 45 லட்சம் இந்தியவர்கள் பயனடைவார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த மசோதாவில் முன்னதாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் இறுதியாக நிறைவேற்றப்பட்ட மசோதாவில் 1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பாக அமெரிக்கா நாடாளுமன்றத்தின் செனட் சபையில் பிக் பியூட்டிஃபுல் பில் எனப்படும் செலவின குறைப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த வாரம் தொடக்கத்தில் செலவின குறைப்பு மசோதா விவாதத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. டொனால்டு டிரம்பின் குடியரசு கட்சிக்குள்ளும் எதிர்ப்புகள் இருந்தன.

இறுதியாக மசோதாவுக்கு 51 பேர் ஆதரவு தெரிவித்தனர். தற்போது அந்த செலவின குறைப்பு மசோதாவில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களால், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் மிகப்பெரிய பலனை அடைவார்கள். இந்த மசோதாவில் முன்னதாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்ப 5 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆனால் இறுதியாக நிறைவேற்றப்பட்ட மசோதாவில் 1 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக அமெரிக்காவில் உள்ள 45 லட்சம் இந்தியர்கள் மிகப்பெரிய பயனடைவார்கள். இந்த திருத்தம் அமெரிக்காவில் கிரீன் கார்டு வைத்திருப்பவர்கள், ஹெச்1பி மற்றும் ஹெச் 2ஏ விசா வைத்திருப்பவர்களுக்கும், மாணவர்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஐடி துறையில் லட்சக்கணக்கான இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனுப்பும் பணம் இந்தியாவில் உள்ள பல்வேறு குடும்பங்களுக்கு முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வந்தது. அதற்கு அதிக வரி விதிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்ததால், பலரும் கவலை தெரிவித்து வந்தனர். தற்போது 1 சதவிகிதமாக குறைக்கப்பட்டிருப்பதால், நிம்மதி அடைந்துள்ளனர்.

2023-24 ஆண்டில் வெளிநாட்டில் இருக்கும் இந்தியர்கள் மூலமாக 129 பில்லியன் அமெரிக்கா டாலர்கள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவில் இருந்து மட்டும் 28 சதவிகிதம் பணம் அனுப்பப்பட்டுள்ளது. கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிதி மூலமாகவே பல்வேறு குடும்பங்கள் தங்களின் அன்றாட செலவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *