சீனா மற்றும் மலேசியா இடையே ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் EVE Energy Malaysia Sdn Bhd!

- Muthu Kumar
- 17 Dec, 2024
Kedah, Kulim, Padang Meha போன்ற இடங்களில் உலகளாவிய லித்தியம் பேட்டரி உற்பத்தியாளரான EVE Energy Malaysia Sdn Bhd, தனது புதிய உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்துள்ளது.
இந்த உற்பத்தி நிலையமானது தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உள்ள மின் கருவி மற்றும் மின்சார இரு சக்கர வாகனத் துறை வாடிக்கையாளர்களுக்கு தங்களது உற்பத்தியின் மூலம் சேவை செய்யும் என்று தெரிவித்துள்ளது.
மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையம் (மிடா), EVE எனர்ஜியுடன் வெளியிட்ட ஒரு கூட்டறிக்கையில், இந்த தொழிற்சாலையில் 2,000 தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும் அவர்களில் பெரும்பாலோர் தொழில்நுட்ப திறன்களைக் கொண்டுள்ளவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம், ஆற்றல் மாற்றம் மற்றும் குறைந்த கார்பன் மேம்பாடு ஆகியவற்றால் ஏற்படும் கடுமையான பிரச்சனைகளை எதிர்கொள்வதுதான் சவாலாக இருக்கும் என்று மிடா தலைமை நிர்வாக அதிகாரி சீக் ஷம்சுல் இப்ராஹிம் சீக் அப்துல் மஜித் கூறினார்.நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கான தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் ஆற்றல் மாற்றத்தை மலேசியா ஊக்குவித்து வருவதாகவும் மேலும் அவர் கூறினார்.
ஆகஸ்ட் 2023ல் அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு 16 மாதங்களில் ஆலை கட்டி முடிக்கப்பட்டது.மேலும் இந்த தொழிற்சாலை 2025 முதல் காலாண்டில் செயல்படத் தொடங்கும் என்று EVE எனர்ஜி மூத்த துணைத் தலைவர் வின்சென்ட் வோங் கூறினார்.
புதிய எரிசக்தி துறையில் சீனா மற்றும் மலேசியா இடையே மேலும் ஒத்துழைப்பையும் பரிமாற்றத்தையும் இந்த தொழிற்சாலை ஊக்குவிக்கும் என்று EVE எனர்ஜியின் இணை நிறுவனரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான லியு ஜியான்ஹுவா கூறினார்.
Huizhou நகராட்சி அரசாங்கத்தின் துணை மேயர் லி ஜுன்லிங், சீக்கிய ஷம்சுல், கெடா மாநில நிர்வாக கவுன்சிலர் ஹைம் ஹில்மன் அப்துல்லா மற்றும் லியு ஆகியோர் இந்த புதிய உற்பத்தி நிலைய திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *