பெர்சத்துவில் இந்திய பெண்! வலுக்கும் எதிர்ப்பு!

top-news
FREE WEBSITE AD

சமீபத்தில் பெர்சத்து கட்சியின் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக Mourhrna Anetha Reddy நியமிக்கப்பட்டது தொடர்பாகப் பெர்சத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்களுக்கு முன்னறிவிப்பு ஏதும் செய்யப்படவில்லை என பெர்சத்து கட்சியின் மற்றொரு கூட்டணி ஒருங்கிணைப்பாளரான Dr Chong Fat Full கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

பெர்சத்துக் கட்சியின் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும்  Anetha Reddy கட்சிக்குத் தொடர்பே இல்லாதவர் என்றும், நியமனப் பதவிகள் உச்சமன்றத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு அதன்பின் வழங்கியிருக்கலாம் என Dr Chong Fat Full தெரிவித்துள்ளார்.

தற்காலிகமாக Mourhrna Anetha Reddy க்கு அப்பதவி வழங்கப்பட்டிருக்கலாம் என்றும் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவிருக்கும் பெர்சத்துவின் கட்சித் தேர்தலில்  Anetha Reddy போட்டியிட்டாலும் பெர்சத்து உறுப்பினர்கள் ஆதரிக்கமாட்டார்கள் என அவர் தெரிவித்தார்.

Mourhrna Anetha Reddy என்பவர் முன்னதாகக் கெராக்கான் கட்சியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *