கெடாவில் ஆலயங்கள் உடைக்கப்படும் அபாயம்!! அறவழியில் போராடும் கோயில் நிர்வாகம்!
- Thina S
- 16 May, 2024
ஏன் இந்திய வழிப்பாட்டுத் தளங்களுக்கு மட்டும் இந்த நிலைமை எனும் கேள்வியுடன் சுங்கை செலுவாங் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத் தலைவர் கிஷோர் குமார் த/பெ கிருஷ்ணன் தமிழ் மலர் நாளிதழுக்கு இச்செய்தியை வழங்கினார்.
கெடா சுங்கை
செலுவாங் தோட்டப்புறத்தில் அமைந்துள்ள
ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தை உடனடியாக அப்புறப்படுத்தும்படியாக இரண்டு அறிக்கைகளைப்
பெற்றிருப்பத்தாக அவ்வாலயத்தின் தலைவர் கிஷோர் குமார் த/பெ கிருஷ்ணன் தெரிவித்தார்
.
1953 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட ஸ்ரீ மஹா
மாரியம்மன் தேவஸ்தானத்தை உடனடியாக அந்நிலத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று 2022 ஆம் ஆண்டில் கேதிபிசி நிறுவனம் ( KTPC - KULIM TECHNOLOGY PARK
COOPERATION) அவ்வாலயத்திற்கு
முதல் நோட்டீஸ் வழங்கியத்தாக கிஷோர்குமார் தெரிவித்தார். அதற்கான காரணத்தை
கேதிபிசி நிறுவனத்திடம் கேட்டப்பொழுது சைம் டார்பி நிறுவனம்( Sime Darby ) அவர்களின்
மேற்பார்வையில் இருந்த அனைத்து நிலத்தையும் கேதிபிசி நிறுவனத்திடம் விற்கப்பட்டு
விட்டத்தாகவும் குறிப்பிட்ட நிலப்பகுதியில் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளவிருப்பதால்
கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என அத்தனியார் நிறுவனம் பதிலளித்துள்ளது.
இது தொடர்பாக தனியார்
நிறுவனத்துடன் ஆலய நிர்வாகம் பலகட்ட போராட்டத்திற்குப் பின் பேச்சு வார்த்தையை நடத்தியது.
அப்பேச்சுவார்த்தையின் போது சுங்கை செலுவாங் ஸ்ரீ மஹா மாரியம்மன் தேவஸ்தானத்தின்
நிர்வாகம், கூலிம் ஹய் தேக் பாக் ஊராட்சி மன்றத்தின்
சந்திப்புக் கூட்டத்தில் கலந்துக் கொண்டனர். ஆலயம் இப்பொழுது இருக்கும் நிலத்திலற்கு
மாற்றாகத் தோட்டத்தின் உள் பகுதியில் சுமார் 12 கீலோ மீட்டர் தொலையில் ஒதுக்குப்புற
நிலத்தை அத்தனியார் நிறுவனம் வழங்குவதாகத் தெரிவித்தது.
அவர்கள்
வழங்கிய நிலத்தை ஏற்கொள்ள முடியாது என ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். காரணம் சுங்கை
செலுவாங் ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலத்தை சுற்றி 10
குடியிருப்புப் பகுதிகளில் குறைந்தது 2000 த்திற்கும்
மேற்பட்ட இந்தியக் குடும்பங்கள் உள்ளன. அக்குடும்பத்தினர்களின் ஒற்றை வழிப்பாடுத்
தளமாக இவ்வாலயம் உள்ளது. அதே சமயத்தில் ஆலயம் நிர்வாகம் லுனாஸ் வட்டாரத்திலுள்ள
ஓர் இடத்தைக் கேட்டதாகவும், அவ்விடத்தில் வேறொரு மேம்பாட்டுத் திட்டம்
வர உள்ளத்தாகத் தனியார் நிறுவனம் மறுத்தது. ஆனால் பல ஆண்டுக் காலமாக அந்நிலம்
காலியாகவே உள்ளது என ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது..
ஒரு புதிய மேம்பாட்டு திட்டம் வருவதற்கு முன்பு நிலப்பகுதியை ஆய்வுச் செய்திருப்பது அவசியம்,. அதில் இந்நிலத்தில் ஆலயம் இருப்பத்தை சைம் டார்பி தெரிவிக்கவில்லையா அல்லது கேதிபிசி நிறுவனம் அறிந்தும் அறியாமல் போல் உள்ளதா ? என ஆலயத் தலைவர் கிஷோர் குமார் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை நில அலுவலகம் , ஹய் தேக் பாக் ஊராட்சி மன்றம் மற்றும் கேதிபிசி நிறுவனம் ஆகியோரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு எந்தவொரு பதிலும் இல்லை.
தற்போது மீண்டும் ஆலயத்தை உடைக்க அரசு நில நிர்வாகத்திடமிருந்து அறிக்கை பெற்றதும். கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ முகமாட் சனூசி மாட் நோர் அவரின் சிறப்பு அதிகாரி குமரேசன் , கெடா மாநில இந்தியர்களின் ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஜியா ஜேன் , லுனாஸ் சட்டமன்ற உறுப்பினர் கைருல் அன்வார் ரம்லி மற்றும் கூலிம் ஹய் தேக் ஊராட்சி மன்ற உறுப்பினர் மாரிமுத்து ஆகியோரிடமும் இவ்வாலயத்தின் சூழ்நிலையை விவரித்து இப்பொழுது இருக்கும் நிலத்திலே ஆலயம் தற்காக்க வேண்டும் என்று கோரி கடிதங்கள் வழங்கப்பட்டது என ஆலயத் தலைவர் கிஷோர் குமார் தெரிவித்தார்.
தொடர்ந்து , அந்த நோட்டீஸ்யில் ஆலயத்தை உடனடியாக நிலத்தை விட்டு
வெளியேறவில்லை என்றால் சுங்கை செலுவாங் ஆலயம் உடைக்கப்படும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது . அதன் பிறகு , இப்பிரச்சனைக்கு ஒரு
முடிவுக் கிடைக்க வேண்டும் நோக்கத்தில் கெடா மாநில மந்திரி பெசார் டத்தோ முகமாட்
சனூசி மாட் நோர் அவரின் சிறப்பு அதிகாரி குமரேசன் , கெடா மாநில
இந்தியர்களின் ஆட்சிக் குழு உறுப்பினர் வோங் ஜியா ஜேன் , லுனாஸ்
சட்டமன்ற உறுப்பினர் கைருல் அன்வார் ரம்லி மற்றும் கூலிம் ஹய் தேக் ஊராட்சி மன்ற உறுப்பினர்
மாரிமுத்து ஆகியோரிடமும் இவ்வாலயத்தின் சூழ்நிலையை விவரித்து மற்றும் இப்பொழுது
இருக்கும் நிலத்திலே ஆலயம் தற்காக்க வேண்டும் என்று கோரி கடிதங்கள் வழங்கப்பட்டது.
அதுமட்டுமின்றி , கூலிம் ஹய் தேக் பாக்கிலுள்ள இன்னும் பல
ஆலயங்கள் உடைப்படுவத்தற்காக வாய்ப்புகள் இருப்பத்தாக சுங்கை செலுவாங் சுற்று
வட்டார மக்கள் தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *