தமிழக பெண்களிடம் 6,720 டன் தங்கம்! - சர்வதேச கோல்டு கவுன்சில் தகவல்!

- Muthu Kumar
- 31 Dec, 2024
உலகிலேயே தமிழ்நாட்டு பெண்கள்தான் அதிக தங்கத்தை வைத்திருக்கிறார்களாம். தமிழக பெண்களிடம் 6,720 டன் தங்கம் இருப்பதாக சர்வதேச கோல்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையானது பரபரப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி வருகிறது.
அதாவது, இந்திய பெண்கள் மொத்தமாக 24,000 டன் தங்கத்தை ஆபரணங்கள் வடிவில் வைத்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவிலேயே முக்கியமாக தென்னிந்தியாவில், தங்கம் மிகுந்த கௌரவம் தரக்கூடிய பொருளாக காலம் காலமாக மதிக்கப்பட்டு வருகிறது.. அதனால்தான், பிறப்பு முதல் திருமணம் வரை என வாழ்வின் அனைத்து மகிழ்ச்சி தருணங்களிலும், தங்க நகைகளுக்கென்று பிரத்யேக இடம் உள்ளது.
அதிலும் தென்னிந்தியாவிலேயே, அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலம் தமிழ்நாடுதான்.காரணம், தங்க நகைகள் மீதான மோகம் பெண்களிடம் இன்னமும் குறையாமல் இருக்கிறது.. தங்கத்தின் மதிப்பும், விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டேயிருக்கிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்தாலும்கூட தங்க நகைகளை ஆர்வத்துடன் வாங்குவது மட்டும் மக்களிடம் குறையவில்லை.
இதற்கெல்லாம் காரணம், தங்கம் ஒரு நல்ல முதலீட்டு தேர்வாகும். எனவேதான், வங்கிகளில் லாக்கர் வசதி இருந்தாலும்கூட, வீடுகளிலும் சிறிதளவு தங்கத்தை பெண்கள் வைத்திருக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.வீட்டில் தங்கம் இருந்தால்,அந்த குடும்பமே செழிப்பாக இருக்கும் என்று நம்பிக்கையும் பலரிடம் காணப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டு பெண்களிடம், 6,720 டன் தங்கம் இருப்பதாக உலக கோல்டு கவுன்சில் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இதுகுறித்து உலக கோல்டு கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில்
இந்தியாவில் செல்வம் மற்றும் செழிப்பின் அடையாளங்களில் ஒன்றாக தங்கம் கருதப்படுகிறது. இது இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய பெண்கள் சுமார் 24,000 டன் தங்கம் வைத்துள்ளனர். எந்த நாடும் வைத்திருக்கும் தங்கத்தை விட இது மிக அதிகமாகும். இந்த தங்கத்தின் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்து வருகிறது.
உலகின் தங்கத்தில் 11 சதவீதம் இந்தியப் பெண்களிடம் உள்ளது. உலகின் முதல் 5 நாடுகளின் தங்கத்தை விட இது அதிகமாகும்.. அமெரிக்கா 8,000 டன், ஜெர்மனி 3,300 டன், இத்தாலி 2,450 டன், பிரான்ஸ் 2,400 ரஷ்யா 1,900 டன் என தங்கம் வைத்துள்ளன. இந்தியாவில் இருக்கும் தங்கத்தில் 40 சதவீதம் தென்னிந்தியப் பெண்களிடம் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டு பெண்களிடம் மட்டும் 6,720 டன் தங்கம் உள்ளது. இது இந்தியாவின் கையிருப்பில் 28 சதவீதமாகும்.
இந்தியாவில் மகளிர் வைத்துள்ள தங்கம், அமெரிக்கா, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய முதன்மையான நாடுகள் வைத்துள்ள தங்கம் கையிருப்பைவிடவும் அதிகம்.
இந்தியாவின் வருமான வரித்துறை சட்டங்களின்படி திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்திருக்கலாம். மணமாகாத பெண்களிடம் 250 கிராம் வரையிலும் ஆண்களிடம் 100 கிராம் வரையிலும் தங்கம் இருக்கலாம் என்ற அனுமதி உள்ளது. எனவேதான், இந்தியாவில் பெண்களிடம் தங்கம் அதிகம் இருக்கின்றன" என்று சர்வதேச கோல்டு கவுன்சிலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *