அன்வாரின் பிரான்ஸ் பயணம் வெற்றி, அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டது!

- Muthu Kumar
- 06 Jul, 2025
பாரிஸ், ஜூலை 6-
பிரான்ஸ் நாட்டிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்கொண்ட இரண்டு நாள்கள் பயணம் வெற்றிகரமானது என்றும் இரு நாடுகளும் அனைத்து துறைகளிலும் மேலும் ஒத்துழைப்பை மேம்படுத்தியதாக, அந்நாட்டின் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் விவரித்திருக்கின்றார்.
தமது சகாவான பிரான்சோய்ஸ் பேய்ரூ மற்றும் மூத்த அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட உயர்மட்ட சந்திப்பு, பாரிஸ், சோர்போன் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய முக்கிய உரை, பிரான்ஸ் நாட்டின் வணிக பிரதிநிதிகளுடன் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கொண்ட சந்திப்பின் வழி அவை அடையப்பட்டதாக, அவர் கூறினார்.மலேசிய உயர் அதிகாரிகள் ஆக கடைசியாக பிரான்ஸ்க்கு பயணம் செய்து 15 ஆண்டுகள் கடந்துவிட்டதால், பிரதமர் அன்வாரின் இப்பயணம் மிகவும் அர்த்தமுள்ளது என்றும் மக்ரோன் சுட்டிக்காட்டினார்.
கனிம வளங்கள், விமான கொள்முதல் போன்ற
துறைகளில் இருநாடுகளும் ஒப்பந்தங்களில் கையெழுத் திட்டிருப்பது தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.முன்னதாக, பாரிசில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தில், தென்கிழக்கு ஆசியா, ஐரோப்பா,ஈடுபாட்டின் விதிமுறைகளை மறுசீர் மைத்தல்' என்ற தலைப்பில் டத்தோஸ்ரீ அன்வார் சொற்பொழிவு ஆற்றினார். அதில், தென்கிழக்கு ஆசியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடம் அனைத்து இடையிலான அனைத்து அம்சங்களிலும் சமமான ஒத்துழைப்புக்கும் அவர் அழைப்பு விடுத்தார்.
மலேசியா, ஆசியான் நாடுகளுடன் பிரான்சின் உறவு வலுவடைந்து வருவதாக கூறிய மகரோன், கடந்த மே மாதம் இந்தோனேசியா, வியட்நாம், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அன்வார் மேற்கொண்ட பயணம் வளர்ந்து வரும் அனைத்துலக உறவுகளின் மறுமலர்ச்சிக்கான அறிகுறி என்றும் தெரிவித்தார்.
Lawatan dua hari Perdana Menteri Anwar Ibrahim ke Perancis berjaya memperkukuh kerjasama pelbagai sektor antara Malaysia dan Perancis. Presiden Emmanuel Macron gembira dengan perjanjian dalam sektor mineral dan pertahanan. Anwar juga menyeru kerjasama ASEAN-Eropah lebih seimbang.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *