பாஜக, திமுக, அதிமுக போன்ற கொள்கை எதிரிகளுடன் கூட்டணி கிடையாது- விஜய்!

- Muthu Kumar
- 05 Jul, 2025
தமிழக அரசியலில் தனி அடையாளத்துடன் செயல்பட்டு வரும் தமிழக வெற்றிக்கழகம், "தீர்மானம் இரண்டு" என்ற தலைப்பில் கொள்கைப் பதிவை வெளியிட்டுள்ளது.
இதில், பாஜக, திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கொள்கை எதிரிகளாகும் என்பதால், அவர்களுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஒருபோதும் கூட்டணி இருக்காது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக போன்ற கட்சிகள், தேசிய அளவில் மத அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தும் விஷம செயல்களில் ஈடுபடுகின்றன. ஆனால் தமிழக மக்கள், சமத்துவம், சமூகநீதி, சகோதரத்துவம், நல்லிணக்கம் ஆகிய உயர்ந்த பண்புகளால் ஊன்றி இருப்பதால், இங்கே பாஜகவின் மதவாதம் வேர் ஊன்ற முடியாது என கூறப்பட்டுள்ளது.
மேலும், பெரியார், அண்ணா போன்ற முன்னோடியை அவமதித்து தமிழகத்தில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கும் பாஜகவுக்கு எதிராக தமிழக மண் எப்போதும் துணையாக நிற்கும் என்றும், அந்த நிலைப்பாட்டில் எந்த சமரசமும் இல்லை என்றும் வெற்றிக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
பாஜக மீது விமர்சனங்களை பதிவு செய்த வெற்றிக்கழகம், "மலிவான அரசியல் வாதங்களுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை" என்று கூறியுள்ளது. தமிழகத்தில் மத அடிப்படையிலான அரசியலை ஏற்படுத்த முயற்சிக்கும் பாஜக தோல்வியடையும் என்றும், அதன் செயல்கள் வேறு மாநிலங்களில் எடுபட்டாலும் தமிழகத்தில் எடுபடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், எதிர்காலத்தில் உருவாகும் எந்தவொரு கூட்டணியிலும் திமுக, பாஜக உள்ளிட்ட பிளவுவாத சக்திகளுக்கு எதிரான கூட்டணியாக மட்டுமே அது அமையும் என்றும் கூறப்பட்டுள்ளது.
"பாஜகவோ, திமுகவோ அல்லது அதிமுகவோ இல்லாத புதிய அரசியல் மாற்றத்திற்கு தமிழக வெற்றிக்கழகம் ஒரு மாற்றாக உருவாகிறது" எனவும், "பொதுமக்கள் நலனையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும்" என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *