கடவுளே முதலில் எல்லா படமும் ரிலீஸ் ஆகட்டும் - லைக்கா நிறுவனம் திடீர் முடிவு!

top-news
FREE WEBSITE AD

10 வருடங்களுக்கு முன்பு கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழ் சினிமாவில் நுழைந்தன. இதில், லைக்கா நிறுவனம் முக்கியமான ஒன்றாகும். இலங்கை தமிழரான சுபாஷ்கரான் லண்டனில் பெரிய தொழிலதிபர். இலங்கையிலும், லண்டனிலும் அவருக்கு பல தொழில்கள் உண்டு. தமிழ் சினிமாவின் மீது இருந்த ஆர்வத்தில் சென்னையில் ஒரு அலுவலகம் துவங்கி முதலீடு செய்தார். 

ரஜினி, விஜய் போன்ற பெரிய நடிகர்களை வளைத்து போட்டு அவர்களுக்கு பல கோடிகளை சம்பளமாக கொடுத்தது இந்நிறுவனம். முதல் படமே விஜயை வைத்து கத்தி படத்தை துவங்கியது லைக்கா நிறுவனம். ஒருபக்கம் சன் பிக்சர்ஸ், ஏஜிஎஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களும் சினிமா எடுக்க துவங்கியது. 

கேட்ட சம்பளத்தை விட பல கோடிகள் கொடுக்க தயாராக இருந்ததால் ரஜினி, கமல், விஜய், அஜித் போன்றோர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கால்ஷீட் கொடுத்தானர். ஏனெனில் இவர்கள் கேட்கும் 100 கோடி சம்பளத்தை தனி நபர் தயாரிப்பாளர்களால் கொடுக்க முடியாது என்பது முக்கிய காரணம். 

கமலை வைத்து இந்தியன் 2, ரஜினியை வைத்து வேட்டையன், அஜித்தை வைத்து விடாமுயற்சி என முக்கிய படங்களை தயாரித்து வருகிறது லைக்கா. ஆனால், சமீபகாலமாக லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கி தவிப்பதாக சொல்லப்படுகிறது. அதனால்தான் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு கூட பல நாட்கள் நடைபெறாமல் இருந்தது. 

இந்நிலையில், இப்போது தயாரித்து கொண்டிருக்கும் படங்களை மட்டும் ரிலீஸ் செய்துவிட்டு சினிமா தயாரிக்கும் தொழிலில் இருந்தே விலகி விட லைக்கா நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது. இது பெரிய நடிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *