நடிகர் மம்மூட்டிக்கு கேன்சரா? விளக்கம் கொடுத்த மம்மூட்டியின் பிஆர்ஓ!

top-news
FREE WEBSITE AD

மம்மூட்டி நடித்திருக்கும் பசூக்கா திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதனை தாண்டி தனது அடுத்தடுத்த படங்களையும் கமிட் செய்து வைத்திருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாகவும் அதனால் தன்னுடைய கமிட்மென்ட்களில் இருந்து விலகி ஓய்வெடுத்து வருவதாகவும் சமூக வலைதளப் பக்கங்களில் தீயாக பரவியது.

இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவித்து மம்மூட்டியின் பிஆர்ஓ தற்போது அறிக்கை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
இது பொய்யான தகவல் ரமலான் பண்டிகைக்காக நோன்பு இருப்பதால் மம்மூட்டி விடுப்பு எடுத்திருக்கிறார். இதனால் தான் அவர் படப்பிடிப்புகளிலிருந்து ஒரு இடைவெளியும் எடுத்திருக்கிறார்.

இந்த இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பில் நடிக்க தொடங்கிவிடுவார் எனக் கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இயக்குநர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன் லால் -மம்மூட்டி லெஜண்ட் நடிகர்கள் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பதால் மலையாள திரை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில், இப்படத்தின் பூஜை தொடங்கி இலங்கையில் படப்பிடிப்பு தொடங்கியது. 15 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர்.மம்மூட்டி, மோகன்லால் உடன் குஞ்சாக்கோ போபன், பஹத் பாசில், நயன்தாரா என ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். முன்னதாக கடல் கடனு ஒரு மாத்துக்குட்டி என்ற படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *