2 நாட்களில் மோகன்லாலின் 'எம்புரான்' படைத்த சாதனை!

- Muthu Kumar
- 29 Mar, 2025
மோகன்லால் நடிப்பில் உருவான 'எம்புரான்' படம் வெளியான 2 நாட்களில் பாக்ஸ் ஆஃபீஸில் புதிய சாதனை படைத்துள்ளது.
2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான மலையாள படம் 'லூசிஃபர்'. மஞ்சு வாரியர், டோவினோ தாமஸ், விவேக் ஓபராய் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அரசியலை மையமாக வைத்து உருவான இப்படம் மலையாளத்தின் முதல் ரூ.200 கோடி படம் என்ற பெருமையைப் பெற்றது. முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இரண்டாம் பாகத்தை உருவாக்கியுள்ளார் பிருத்விராஜ். 'எம்புரான்' என தலைப்பு இடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு முரளி கோபி திரைக்கதை எழுதியுள்ளார். தீபக் தேவ் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பிரமாண்ட காட்சிகளும், சினிமோட்டோகிராஃபியும், மாஸ் ஆக்ஷன் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதே சமயம் அழுத்தமில்லாத திரைக்கதையும் ஓவர் ஸ்லோமோஷன் காட்சிகளும் சோதிப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.
ரூ.180 கோடி பட்ஜெட்டில் இப்படம் உருவானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படம் வெளியான 2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த முதல் மலையாள படம் என்ற சாதனையை படைத்துள்ளது 'எம்புரான்'.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *