9 லட்சம் பார்வையாளர்களைகவரும் ஜொகூர் கைவினை விழா 2024

- Muthu Kumar
- 24 Dec, 2024
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, டிச. 24
கலை மற்றும் பாரம்பரிய அமைச்சின் கலாச்சார துணை தலைமை செயலாளர், மந்திரி பெசார் டத்தோ' முகமட் யுஸ்ரி பின் முகமட் யுஸோஃப், 2024 ஜொகூர் கைவினைப் பொருட்கள் விழாவுக்கு 9 லட்சம் பார்வையாளர்களின் வருகையை இலக்காகக் கொண்டுள்ளார்.
ஜொகூர் பாரு மாலின் அங்சனா பகுதியிலுள்ள பாடாங் அகாசியாவில் நடைபெற்று வரும் இந்த விழாவுக்கு கடந்த சனிக்கிழமை கைவினைப் பொருட்களின் கடைகளை பார்வையிட்ட பின்னர் அவர் இதனைத் தெரிவித்தார். பொது விடுமுறை, இந்நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த விழாவை மலேசியா கைவினைப் பொருட்கள் கழகம் மற்றும் தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத்துறை இணைந்து நடத்தி வருகிறது. மலேசியா கைவினை கழகத் தலைவர் டத்தோ' ஐனு ஷாம் பின்தி ஹாஜி ரம்லி மற்றும் தேசிய கலாச்சார கலைத் துறைத் தலைவர் முகமட் அம்ரான் பின் முகமட் ஹாரிஸ் ஆகியோர் துவக்க விழாவில் பங்கேற்றனர்.2024 ஜொகூர் கைவினை விழா, 19 டிசம்பர் முதல் 30 டிசம்பர் வரை இரண்டு வாரங்கள் நடைபெறுகிறது. இது 11வது ஆண்டு நிகழ்வாக, ஜொகூர் மாநிலத்தின் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் வளமை, மிக்க கலைஞர்கள் மற்றும் வணிகர்கள் இணைந்து மிகச்சிறப்பாக இதனை நடத்துகின்றனர்.
இந்த விழாவின் சிறப்பம்சங்களில் மலேசிய கைவினைப் பொருட்கள் கண்காட்சி முக்கியமானது.இதில் ஜொகூர் மாநிலத்தின் அடையாளமான கம்பீர் மற்றும் மிளகாய் இலை போன்ற வடிவங்களில் தையல்கலைப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதோடு பாரம்பரிய தோட்டத்திலிருந்து “தொன்மையான தோட்டத்தின் உருவகை” எனும் தத்துவத்துடன் சிறந்த தோட்ட அமைப்பு மற்றும் தோட்டக்கலையை காண்பிக்கின்றனர்.
மேலும், 'காலா' லா கலைவிழா 2024 இதே நேரத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு விழாவிற்கு தனித்துவம் ஏற்படுத்தியுள்ளது. இதில் ஜொகூர் பகுதி இசைகள் கதசால், சாப்பின் இசைகள் மற்றும் ஜொகூர் மாநில பாரம்பரிய உணவுகள் கண்காட்சியில் இருக்கின்றன. பார்வையாளர்கள் ஜொகூர் மாநிலத்தின் கலை, பாரம்பரியம் மற்றும் கலாச்சார மிருதுவத்தை “பாரம்பரிய கலை இல்லம்" மூலமாக அனுபவிக்க வாய்ப்புள்ளது என்றார்.
இந்த விழா ஜொகூர் மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் ஒரு மேடையாக மட்டுமின்றி, தேசிய மற்றும் அனைத்துலக அளவில் ஜொகூர் மாநிலத்தின் பார்வையாளர்களை ஈர்க்கும் ஒரு பிரபல நிகழ்வாகவும் மாறியுள்ளதாக டத்தோ' முகமட் யுஸ்ரி பின் முகமட் யுஸோஃப் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *