குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதி செய்ய தீவிர கண்காணிப்பு!
- Muthu Kumar
- 23 May, 2024
குழந்தைகள் கல்வி பெறுவதை உறுதிசெய்ய மாநிலக் கல்வித் துறை நெருக்கமாகக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது என்று ஜோகூர் எக்ஸ்கோ கூறி உள்ளது.
ஜொகூரின் மாநிலக் கல்வித்துறை குழந்தைகள் முறையான ஆரம்பக் கல்வி பெறுகின்றனரா என்பதை உறுதிசெய்வதில் மிக மும்முரமாக கண்காணித்துக் கொண்டு வருகிறது என்று ஜொகூர் கல்வி மற்றும் தகவல் குழுவின் தலைவர்அஸ்னான் தமின் தெரிவித்தார்.
குழந்தைகளுக்கு தேவையில்லாத பழக்கவழக்கங்கள் உருவாவதை தடுக்கவும், குழந்தைகள் பின்தங்கியிருக்காமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
வீட்டுப்பள்ளி குழந்தைகளைப் பள்ளிகளுக்குத் திரும்ப வர ஊக்குவிப்பது, ஆலோசனைகள் வழங்குவது உட்பட வழிகளை
மாநிலக் கல்வித் துறையானது ஆராய்ந்து வருவதாகவும் மற்றும் மாநிலத்தில் முறையான கல்வியைப் பெறாத பல குழந்தைகள் இருக்கலாம், மேலும் அவர்கள் வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதாக இன்று (மே 23) எஸ்.கே.தாமன் பூலாய் இமாஸில் நடைபெற்ற ஆசிரியர் தின விழா மற்றும் கல்வியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
மலேசியக் குழந்தைகள் முறையான ஆரம்பப் பள்ளிகளில் படிப்பதை உறுதிசெய்யவும், அவர்களைக் கண்காணிக்க வேண்டும் என் சில கல்விக் குழுவினரின் கருத்துக்களுக்கு அவர் பதிலளித்தார்.
முறையான கல்வியைப் பெறாத ஒருவரால்தன் உலு திராம் காவல் நிலையம் தாக்கப்பட்டதாகவும், 21 வயதான அந்த நபர் மற்றும் அவரது மூன்று உடன்பிறப்புகளுக்கு முறையான பள்ளிப்படிப்பு இல்லை என்றும், ஜெமா இஸ்லாமியா குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அவர்களின் தந்தையிடம் கல்வி கற்றதாகவும் கூறப்படுகிறது.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டுப் பள்ளிக்கு அனுப்ப விரும்பினால் அந்தந்த PPD இல் பதிவு செய்ய வேண்டும் என்றும்
இது குழந்தைகளை அடையாளம் காணவும், அவர்கள் பின்தங்கி இருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த உதவும் என்றும் அவர் மேலும் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *