பாலிவுட்டின் முன்னணி நடிகரான சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!

- Muthu Kumar
- 16 Jan, 2025
பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவரது நடிப்பில் அண்மையில் தெலுங்கில் 'தேவரா' படம் வெளியானது. இந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு சைஃப் அலி கான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார்.
இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் விழித்ததையடுத்து, சைஃப் அலிகானை கொள்ளையன் 3 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும், இதில் சைஃப் அலிகான் மனைவி கரீனா கபூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து, சைஃப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பந்த்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *