இசைக்காக பணமா! பணத்திற்காக இசையா! ப்ளீஸ் இளையராஜா சார்!
- Muthu Kumar
- 24 May, 2024
பிப்ரவரி மாதம் வெளியாகி 200 கோடிக்கும் மேல் வசூல் செய்த படம் மஞ்சுமெல் பாய்ஸ்.
இப்படத்தின் அனுமதியின்றி இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்காக படத்தின் தயாரிப்பாளருக்கு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
படத்தில் இருந்து பாடலை நீக்க வேண்டும் என்றும் அனுமதி இல்லாமல் பாடலை பயன்படுத்தியதற்காக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இப்படியான சூழ்நிலையில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்கான உரிமத்தை படக்குழு முன்பே வாங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
குணா படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு பாடலுக்கான உரிமத்தை குணா படத்தின் தயாரிப்பாளரிடம் பெற்றபின் தான் இந்த பாடலை பயன்படுத்தியதாக மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் இயக்குனர் சிதம்பரம் தனது முந்தைய நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தற்போது இளையராஜா அனுப்பியுள்ள நோட்டீஸில் தான் இசையமைத்த பாடல்களுக்கான உரிமை மொத்தமும் தனக்கு சொந்தம் என்கிற அடிப்படையில்.
எக்கோ (Echo Recording Company Private Limited ) மற்றும் அகி இசை ரெக்கார்டிங் நிறுவனங்கள் காப்புரிமை முடிந்த பிறகும், பாடல்களைப் பயன்படுத்துகிறார்கள் என்று இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 2-வது வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.
இளையராஜா 1500 படங்களுக்கு இசையமைத்துள்ளார். இவரின் 4,500 பாடல்களை பயன்படுத்த எக்கோ நிறுவனமும், அகி என்ற இசை நிறுவனமும் முன்னதாக ஒப்பந்தம் செய்திருந்தது.
ஒப்பந்த காலம் முடித்த பிறகும், காப்புரிமை பெறாமல் பாடல்களை இரண்டு நிறுவனங்களும் பயன்படுத்தி வருவதாக ஆட்சேபனை தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார். தயாரிப்பாளர்களிடம் உரிமை பெற்று இளையராஜா பாடல்களைப் பயன்படுத்த இசை நிறுவனங்களுக்கு உரிமை உள்ளதாகவும், இளையராஜாவுக்கும் இந்தப் பாடல்கள் மீது தனிப்பட்ட சிறப்பு உரிமை இருப்பதாகவும் கடந்த 2019-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்தார். இதனை எதிர்த்து இளையராஜா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்ததோடு மட்டுமல்லாமல் தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. பாடல்களை இசை நிறுவனம் பயன்படுத்தக்கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
ஆனால் பாடல்களுக்கான காப்புரிமை தயாரிப்பாளரிடம் உள்ளதால், ஒப்பந்தம் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாக எக்கோ நிறுவனம் சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷபிக் அமர்வில் விசாரணையில் உள்ளது.
கடந்த விசாரணையில் இசை நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், 'இளையராஜா எல்லாருக்கும் மேலானவர் என தன்னை நினைக்கிறார்' என கருத்து தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *