அனாவசியமான கேள்வி கேட்க கூடாது-இசைஞானி இளையராஜா!

- Muthu Kumar
- 07 Mar, 2025
இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனியின் நேரடி நிகழ்ச்சியை, லண்டலில் வரும் மார்ச் 8-ம் தேதி அரங்கேற்ற உள்ளார்.
இதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் நடிகர்கள் என அனைவரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த நிலையில், நேற்று காலை லண்டன் செல்ல விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல இந்த நாட்டின் பெருமை என்றார்.
35 நாட்களில் உருவாக்கப்பட்ட சிம்பொனியை இளையராஜா லண்டனில் அரங்கேற்ற உள்ளார். அது ஆசியாவிலேயே யாரும் செய்யாத ஒரு சாதனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இளையராஜாவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஜி.கே.வாசன், விசிக தலைவர் திருமாவளவன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கமல்ஹாசன் இளையராஜா வீட்டுக்குச் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதே போல நடிகர் சிவகார்த்திகேயன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசு ஒன்றை கொடுத்தார்.
இந்நிலையில், லண்டன் செல்வதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்த இளையராஜா செய்தியாளர்களிடம் பேசினார். சிம்பொனி இசையை வெளியிடுவதற்காக, அங்கே இசைக் கலைஞர்கள், உலகிலேயே தலைசிறந்த இசை குழுவான ராயல் கரீபியன் ஆப் லண்டன் அவர்கள் வாசித்து, ரசிகர்கள் எல்லாம் கேட்டு மகிழ்ந்து இந்த இசையை வரும் மார்ச் 8ந் தேதி, அப்பல்லோவில் வெளியிட இருக்கிறோம். இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொள்ளும் ரசிகர்கள் அனைவருக்கும், இந்த நிகழ்ச்சி ஒரு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகமில்லை.
தொடர்ந்து செய்தியாளர்கள் சில கேள்விகளை கேட்க, தேவையில்லாத கேள்விகளை எல்லாம் கேட்காதீர்கள் ஒரு நல்ல நிகழ்ச்சிக்காக சென்று கொண்டிருக்கிறேன், நீங்கள் அனைவரும் நல்ல மனதுடன் வந்திருக்கிறீர்கள் நீங்கள் அனைவரும் வாழ்த்தி இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் என்றார்.
ரசிகர்களைப் போல் நானும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சிம்பொனி இசை நிகழ்ச்சியை நடத்துவது எனக்கான பெருமை அல்ல,இந்த நாட்டின் பெருமை.நீங்கள் அனைவரும் சேர்ந்து தான் நான், உங்களின் பெருமையைத்தான் நான் அங்கு சென்று நிகழ்ச்சி நடத்தப்போகிறேன் என்று பெருமிதத்துடன் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *