ரவி மோகனும்,கெனிஷாவும் மாலையுடன் இருக்கும் புகைப்படத்தால் சர்ச்சை!

top-news
FREE WEBSITE AD

ரவி மோகன் சமீபத்தில் கோலிவுட்டின் தலைப்பு செய்தியாக மாறியுள்ளார். தயாரிப்பாளர் ஐசரி கணேஷின் மகள் திருமணத்துக்கு பின்னணி பாடகி கெனிஷாவுடன் வந்திருந்தார்.இதற்கிடையே ஆர்த்தியை அவர் விவாகரத்து செய்வதாகவும் அறிவித்து நீதிமன்றத்துக்கும் சென்றிருந்தார். சூழல் இப்படி இருக்க கெனிஷாவும் ரவியும் ஜோடியாக வந்திருந்தது பெரிய சர்ச்சையை தமிழ் சினிமா உலகில் ஏற்படுத்தியது.

சினிமாவில் சர்ச்சைகளில் சிக்காமல் இருந்த ரவி மோகன் இப்போது சர்ச்சையின் நாயகனாக மாறியிருக்கிறார். அந்த சர்ச்சை அவரை சுற்றி உருவாக்கப்பட்டிருந்தாலும் தன்னுடைய கரியரில் முழு கவனத்தையும் செலுத்திவருகிறார். ஆர்த்தியுடனான பிரிவை அறிவித்ததை அடுத்து அவரையும் கெனிஷாவையும் இணைத்து வைத்து பேசினார்கள். ஆனால் ரவியோ அதனை திட்டவட்டமாக மறுத்து விளக்கமளித்திருந்தார்.

அதனையடுத்து அந்த விஷயம் கொஞ்சம் ஆறிப்போன சூழலில்தான் கெனிஷாவுடன் திருமணத்துக்கு வந்தார். அந்த வருகையை பார்த்த ஆர்த்தி எமோஷனலாகவும், காட்டமாகவும் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் ஒரு தாயாக நான் குரல் எழுப்புகிறேன்' என்று பல விஷயங்களை குறிப்பிட்டு உருக்கத்தோடு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரவி மோகனும்,கெனிஷாவும் மாலையுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. அவர்கள் குன்றக்குடி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தபோது எடுக்கப்பட்ட அந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்களோ, 'என்ன திடீர்னு இரண்டு பேரும் மாலையும், கழுத்துமாக இருக்காங்க. என்னாச்சுனு தெரியலையே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

முன்னதாக கெனிஷா ஒரு பேட்டியில், நான் எனது சோல் மெட்டை கண்டுவிட்டேன். இந்த சோல் மெட் ரொம்பவே அக்கறையாகவும், பாதுகாப்பாகவும் உணர வைக்கிறார்' என தெரிவித்திருந்தார். பேட்டி மட்டுமின்றி இன்ஸ்டாகிராமிலும் அவர் போடும் போஸ்ட்டுகள் பெரிய கவனத்தை ஈர்க்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *