100 கோடி பட்ஜெட்டில் நயன்தாரா நடிக்க இருக்கும் மூக்குத்தி அம்மன் 2

- Muthu Kumar
- 07 Feb, 2025
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவர் நயன்தாரா. இந்த பட்டம் முதலில் தெலுங்கு நடிகை விஜயசாந்தியிடம் இருந்தது.பிறகு நயன்தாராவுக்கு மாறிவிட்டது. வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி சண்டை காட்சிகளில் நடித்து அந்த பட்டத்தை பெற்றார் விஜயசாந்தி. ஆனால் நயன்தாரா, பல படங்களில் கவர்ச்சியாக நடித்தே அந்த பட்டம் வாங்கி விட்டார்.
முதலில் சிம்பு என்கிற சிலம்பரசன், நடன இயக்குனர் பிரபுதேவா ஆகியோரை காதலித்த நயன்தாரா அவர்களுடன் பிரேக்கப் ஆன நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து, 2 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துக்கொண்டார். உயிர், உலக் என 2 குழந்கைளை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்து வளர்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவை பொருத்த வரை நடிகை நயன்தாரா தான் அதிக சம்பளம் வாங்குபவராக கூறப்படுகிறார். ஒரு படத்துக்கு ரூ. 10 கோடி முதல் ரூ. 12 கோடி வரை அவரது சம்பளமாக கூறப்படுகிறது. ஆனால் அவர் நடித்த 75வது படம் அன்னபூரணிக்கு பிறகு 2 ஆண்டுகளாக அவரது படம் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
நயன்தாரா நடித்த மண்ணாங்கட்டி என்ற படம் இன்னும் திரைக்கு வரவில்லை. தற்போது ராக்காயி,டாக்சிக் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் நடித்த டெஸ்ட் என்ற படம் நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாவதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே நயன்தாரா நடித்த சில படங்கள் இப்படி நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனர் ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்த மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாரா நடித்திருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இப்போது மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கின்றனர்.
மூக்குத்தி அம்மன் 2 படத்தை டைரக்ட் செய்யப்போவது சூப்பர் ஹிட் படங்களை தொடர்ந்து தமிழ் சினிமாவுக்கு கொடுத்து வரும் இயக்குனர் சுந்தர் சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூக்குத்தி அம்மன் 2 படம் ரூ. 100 பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. சும்மாவே நயன்தாரா அலப்பரை தாங்காது. இதில் அவர் ரூ. 100 கோடி பட்ஜெட்டில் நடிக்கிறாரா என ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *