வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் 100 மரங்கள் நட வேண்டும்! - பிரதமர் உத்தரவு

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூரில் வெட்டப்படும் ஒவ்வொரு மரத்திற்கும் நூறு மரங்கள் நடப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர் மேயருக்கு இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக அன்வார் தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கோலாலம்பூர் நகராண்மைக் கழகமான DBKL, தலைநகரில் அதிக ஆபத்து நிலையில் உள்ள 28 மரங்களைக்  கண்டறிந்துள்ளதாகவும், இவை விரைவில் வெட்டப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டதை அடுத்து அன்வார் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

2019ஆம் ஆண்டு முதல் கோலாலம்பூரைச் சுற்றியுள்ள 30 ஆண்டுகளுக்கும் மேலான மரங்கள் அல்லது 1.5 மீட்டருக்கு மேல் சுற்றளவு கொண்ட மரங்கள் மீது ஆணையம் ஆய்வு நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மொத்தம் 175 மரங்கள் அதிக ஆபத்துள்ள மரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன, அவற்றில் பெரும்பாலானவை 50 ஆண்டுகளுக்கும் மேலானவை. இவற்றில் 147 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *