திரெங்கானு அணியில் இம்முறை நான்கு புதிய இறக்குமதி வீரர்கள்!

- Muthu Kumar
- 29 Jun, 2025
திரெங்கானு கால்பந்து அணி, 2025/2026 மலேசிய லீக் போட்டிக்காக பிரேசில், பிரான்ஸ், கேமரூனைச் சேர்ந்த நான்கு புதிய இறக்குமதி வீரர்களின் சேவையைப் பெற உள்ளது. இந்த முடிவு நிதி அழுத்தங்களைக் கருத்தில் கொண்டு, உள்ளூர் வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் ஆறு இறக்குமதி வீரர்களைப் பயன்படுத்திய திரெங்கானு அணி, இந்த முறை நான்கு வீரர்களுடன் தொடர முடிவு செய்துள்ளது. இதில் உஸ்பெகிஸ்தானின் மத்திய திடல் ஆட்டக்காரர் நுரிலோ துக்தாசினோவ் மட்டும் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
இதையொட்டி முகமட் பட்லி ரஹ்மி கருத்துரைக்கையில், நிதி கட்டுப்பாடுகள் காரணமாக இறக்குமதி வீரர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளோம். உள்ளூர் வீரர்களுக்கு முன்னுரிமை அளித்து, அவர்களுக்கு வாய்ப்பு வழங்க விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.மேலும் கேமரூன், பிரான்ஸைச் சேர்ந்த வீரர்கள் தாக்குதல் பிரிவில் பங்கேற்பார்கள், அதே நேரத்தில் பிரேசிலைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் தற்காப்பு, மத்திய திடல் ஆட்டக்காரர்களாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய வீரர்களின் வருகை, கடந்த சீசனில் ஐந்தாவது இடத்தைப் பிடித்த திரெங்கானு அணியின் செயல்திறனை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, திரெங்கானு அணி அதன் இறக்குமதி வீரர்களான இவான் மமூட், அடிசாக் கிரைசோர்ன், ஜோர்டான் மின்ட்டா ஆகியோரை விடுவித்தது. அவர்களின் செயல்திறன் நிலையற்றதாக இருந்ததாகவும், அதிக செலவு காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
புதிய வீரர்களின் தேர்வு, அணியின் தாக்குதல், தற்காப்பை வலுப்படுத்துவதற்கு முக்கியமாக இருக்கும் என நம்பப்படுகிறது.இந்த மாற்றங்கள் திரெங்கானு அணியை அடுத்த ஆண்டில் மலேசிய லீக்கில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்க உதவும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.
Pasukan Terengganu FC bakal menggunakan khidmat empat pemain import baharu dari Brazil, Perancis dan Cameroon bagi musim 2025/2026. Keputusan ini diambil bagi mengurangkan kos dan memberi peluang kepada pemain tempatan, sambil meningkatkan prestasi pasukan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *