சௌத்தர்ன் டைகர்ஸ் கராத்தே கழகம் 16 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது!

- Muthu Kumar
- 21 May, 2025
(கே. ஆர். மூர்த்தி)
ஈப்போ, மே 21-
ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த சௌத்தர்ன் டைகர்ஸ் கராத்தே கழகத்தின் ஒக்கினாவா ஷோரின் ரியோ செபுக்கான் கராத்தே கழகம் தங்கம் உள்பட 16 பதக்கங்களை வென்று சாதனை படைத்தது.அண்மையில் ஈப்போ மாநகரில் அமைந்துள்ள பூப்பந்து விளையாட்டு அரங்கில் அனைத்துலக 21ஆவது ஓகினோவா கோஜு ரியோ கராத்தே பொதுப்போட்டி மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நாடறிந்த கராத்தே மாஸ்டரும் மலேசியா ஓகினோவா கோஜு ரியோ சம்மேளத்தின் தேசிய தலைவருமான மகாகுரு கே. ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியில் அனைத்துலக நிலையில் 1500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கு பெற்றார்கள்.இப்போட்டியில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த சௌத்தன் டைகர்ஸ் கராத்தே கழகத்தின் ஓக்கினாவா ஷோரின் ரியோ செபுக்கான் கராத்தே கழகத்திலிருந்து, அதன் தலைவர் மாஸ்டர் கோஷி ரவி கன்னியப்பன் மற்றும் பல மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.
அவர்கள் அனைவரும் 6 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கல பதக்கங்களை வென்று ஜொகூர் மாநில விளையாட்டு மன்றம், மாநில இளைஞர் விளையாட்டு இலாகா மாவட்ட இளைஞர் விளையாட்டுத்துறை இலாகா மற்றும் மாநில கராத்தே கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள்.
ஜொகூர் கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த மாணவி ஷர்மிளா மிக்கேலாய ஷர்மா ரவி, பூலாய் ஜெயா இடைநிலைப்பள்ளி மாணவன் டோனியல் சுவாஹார் ஷர்மா ரவி, ஸ்ரீ தென்பி இடைநிலைப்பள்ளி மாணவன் சிவன் விக்னேஸ்வரன்,ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவி கேஷிக்கர தேவராங்கி மாணவன் தனேஸ்வர் ரவிந்திரகுமார் மற்றும் கங்கார் பூலாய் இடைநிலைப்பள்ளி மாணவன் விஸ்மன் சங்கரன் ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்தார்கள்.
ஹாரிமிலா கிரிஸ்டல் ஷர்மா ரவி. சுவாதி கோபி குமார், சஸ்வினோத் சுரேந்திரன், ஆகாஷ் தேவராஜ், ஆதீஸ்வர் வி. ரவிந்திரகுமார், ஜீவித்தா ரவிந்தரகுமார் மற்றும் ரவி கன்னியப்பன் ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர்.
ஹரிபிரசாந்த் தமிழ்வாணன், மகேந்திர பிரசாந்த் தமிழ்வாணன் மற்றும் சிவானி தங்கமணி ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இப்போட்டியை கடந்த 21 ஆண்டுகாலமாக ஏற்பாடு செய்து சிறப்பான முறையில் வழிநடத்தி வரும் கிராண்ட் மாஸ்டர் மகாகுரு கு. ஆனந்தன், கெடா மாநில கராத்தே கழகத்தின் தலைவர் மாஸ்டர் கோஷி எஸ். ஸ்டாலின் மற்றும் மாஸ்டர் முத்து தேவராஜ் ஆகியோருக்கு மாஸ்டர் ரவி கன்னியப்பன் நன்றியினையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *