இந்த வார OTT யில் வெளிவர இருக்கும் திரைப்படங்கள்!

- Muthu Kumar
- 14 Feb, 2025
ஓடிடியில் வெளியாகும் பிரபல நடிகர்களின் படங்கள் முதல் இளம் நடிகர்களின் படங்கள் வரை அனைத்து மொழி திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. திரையரங்குகளில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக ஓடிடியில் வரவேற்பு கிடைக்கிறது. இந்த வாரம் நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ, ஜியோ சினிமா போன்ற ஓடிடி தளங்களில் ரிலீசாகும் படங்கள்.
நடிகர் ஜெயம் ரவி, யோகி பாபு, நடிகை நித்யா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ரொமான்டிக் காதல் திரைப்படம் 'காதலிக்க நேரமில்லை'. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் இந்த திரைப்படம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.
2024 ஆண்டு டிசம்பர் மாதம் தியேட்டரில் வெளியான அதிரடி ஆக்ஷன் திரைப்படம் மார்கோ. ஹனீப் அடேனி இயக்கத்தில் நடிகர் உன்னி முகுந்தன் இந்த படத்தில் நடித்துள்ளார். முதலில் மலையாளத்தில் மட்டுமே ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற பிறகு தெலுங்கு தமிழ் மொழிகளில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் ஆனது. இந்த நிலையில் அசத்தலான இந்த கேங்ஸ்டர் திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி இன்று சோனி லைவ் ஓடிடியில் வெளியாக உள்ளது.
பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஏஞ்சலின் மற்றும் கண்ணா ரவி நடிப்பில் உருவாகியுள்ள புதிய வெப் சீரிஸ் 'மதுரை பையனும் சென்னை பொண்ணும்'. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த வெப் சீரிஸ் பிப்ரவரி 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *