நாளை மார்ச் 7ம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படங்கள்!

- Muthu Kumar
- 06 Mar, 2025
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதிய படங்கள் வெளியாவது வாடிக்கையாகி விட்டது. பெரிய நடிகர்களின் படங்கள் வியாழக்கிமை வெளியானாலும் சின்ன நடிகர்களின் படங்கள் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே தொடர்ந்து வெளியாகி வருகிறது.
அந்தவகையில் இந்த வாரம் அதாவது நாளை மார்ச் 7ம் தேதி என்னென்ன படங்கள் வெளியாகிறது என பார்ப்போம்.
முதலில் ஜிவி பிரகாஷின் கிங்ஸ்டன் படம் மீது எல்லோருக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஏனெனில், கடல் சஸ்பென்ஸ் ஹாரர் திரில்லர் படமாக கிங்ஸ்டன் உருவாகியுள்ளது. கடலுக்கு அடியில் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க ஜிவி பிரகாஷ் செல்லும்போது அவர் என்ன ஆனார் என்பதுதான் படத்தின் கதை. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லரும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. இது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25வது திரைப்படமாகும். கமல் பிரகாஷ் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 7ம் தேதி வெளியாகவுள்ளது.
தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள ரூபா கொடுவாயூர் முதன் முதலாக தமிழில் நடித்துள்ள திரைப்படம்தான் எமகாதகி. அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை பெப்பின் ஜார்ஜ் ஜெயசீலன் என்பவர் இயக்கியுள்ளார்.அடுத்து மர்மர் என்கிற ஹாரர் படமும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. இது தமிழில் உருவாகியுள்ள முதல் பவுண்ட் ஃபுட்டேஜ் ஹாரர் திரைப்படமாகும். அதாவது காட்சிகளை நேரடியாக ரெக்கார்ட் செய்து காட்டுவது போன்ற ஒரு உணர்வை படம் பார்க்கும் போது ஏற்படுத்தும். இப்படத்தை ஹோம்நாத் நாராயனன் இயக்கியுள்ளார்.
அடுத்து நிறம் மாறும் உலகில் என்கிற படம் 7ம் தேதி வெளியாகவுள்ளது. அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், நட்டி, ரியோ ராஜ், சாண்டி, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். உறவுகளின் முக்கியத்துவத்தை உணர்வுப்பூர்வமாக பேசும் படமாக நிறம் மாறும் உலகில் உருவாகியுள்ளது.
ஜோஷ்வா சேதுராமன் இயக்கியுள்ள ஜென்டில் உமன் படமும் வருகிற வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது. திருமணத்திற்கு மீறிய உறவில் ஒரு பெண் வரும்போது ஒரு குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படத்தில் லாஸ்லியா, லிஜிமோல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
அடுத்து லெக் பீஸ் என்கிற படமும் இந்த வாரம் ரிலீஸாகிறது. இந்த படத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ஸ்ரீநாத் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். மேலும், இந்த படத்தில் விடிவி கணேஷ், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதேபோல் நடிகர் ஷாம் நடித்துள்ள அஸ்திரம் என்கிற படமும் இந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகவுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *