ஈ.சி.ஆர்.எல். மின் கம்பிகள் திருட்டு- 22 புகார்களைப் போலீஸ் பெற்றுள்ளது!

- Muthu Kumar
- 26 Jun, 2025
கோல திரெங்கானு, ஜூன் 26-
இவ்வாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை திரெங்கானு, கிழக்குக்கரை ரயில் பாதைத் திட்டம் ஈ.சி.ஆர். எல் தளத்தில் 3 லட்சம் மதிப்புள்ள மின் கம்பிகள் களவாடப்பட்டது உட்பட 22 கொள்ளைச் சம்பவங்கள் குறித்த புகார்களை போலீசார் பெற்றுள்ளனர்.
அந்த எண்ணிக்கையின் விளைவாக பெசூட்டில் ஐந்து, மாராங்கில் நான்கு, செத்தியூவில் இரண்டு, கெமாமான் மற்றும் டுங்குனில் முறையே ஒன்று என மொத்தம் 13 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
சம்பந்தப்பட்ட 13இலிருந்து ஐந்து வழக்குகள், குற்றவியல் சட்டம் செக்ஷன் 414 மற்றும் செக்ஷன் 379/511-நீதிமன்றத்தில் இன் கீழ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுள்ளதாக, திரெங்கானு மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் கைரி கைருடின் கூறினார்.
குற்றஞ்சாட்டப்படுவதற்கும் கைது செய்வதற்கும் முறையான ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால், மேலும் ஐந்து வழக்குகள் மேல் நடவடிக்கை இல்லை என்று வகைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், எஞ்சிய மூன்று இன்னும் விசாரணையில் இருப்பதாக, இன்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது கைரி உறுதிபடுத்தினார்.
கடந்தாண்டு ஜனவரி முதலாம் தேதி தொடங்கி மே 31ஆம் தேதி வரை சுமார் 20 லட்சம் இழப்பீடுகள் கொண்ட 35 புகார்களைப் போலீஸ் பெற்ற நிலையில், அதே காலகட்டத்தில் கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது, இவ்வாண்டில் அந்த எண்ணிக்கை குறைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
Sebanyak 22 kes kecurian, termasuk kabel elektrik bernilai RM300,000, dilaporkan di tapak projek ECRL Terengganu dari Januari hingga Mei 2024. Polis membuka 13 kertas siasatan, lima kes didakwa di mahkamah, manakala tiga lagi masih disiasat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *