அன்வார் என்னை 20 நிமிடங்கள் கடுமையாகத் திட்டினார்! – RAFIZI குற்றச்சாட்டு!

top-news

ஜூலை 6,


கடந்த பி.கே.ஆர் கட்சியின் தேர்தலின் போது எனது செயல்பாடுகளால் பல பாதிப்புகள் வந்ததாக அன்வார் என்னை கடுமையாகத் திட்டியதாக பி.கே.ஆர் கட்சியின் முன்னாள் துணைத்தலைவரும் பொருளாதார முன்னாள் அமைச்சருமான Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார். கடந்த மே 23 கட்சித் தேர்தலுக்கு முன்னதாக பி.கே.ஆர் கட்சியின் உச்சமன்றக் கூட்டம் நடைபெற்றதாகவும் அப்போது அன்வார் வெளிப்படையாகத் தம் மீது கோபத்துடன் கத்தியதாகவும் இதனால் அன்வார் என் மீது அதிருப்தியில் இருப்பதைக் கட்சியினர் உணர்ந்ததால் NURUL IZZAHவுக்கு அவர்கள் ஆதரவளித்ததாக Datuk Seri Rafizi Ramli குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். 

கட்சித் தேர்தலை டிஜிட்டல் முறையில் நடத்தியது குறித்து பல்வேறு சிக்கல்களை நான் முன் வைத்தேன். இதனால் கட்சியின் பாரம்பரிய உறுப்பினர்கள் பாதிக்கப்படுவதாக நான் பி.கே.ஆர் கட்சியின் பொதுச் செயலாளர் Datuk Fuziah Salleh மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்த போது அன்வார் குறிக்கிட்டு சுமார் 20 நிமிடங்கள் தம்மை கடுமையாகத் திட்டியதாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்தார். பி.கே.ஆர் கட்சியின் மேலவை தலைவர்கள் என் மீது கொண்டிருந்த மொத்த நம்பிக்கையையும் அன்வார் அந்த 20 நிமிடத்தில் உடைத்து விட்டதாகவும் அதன் பின்னர் தான் NURUL IZZAHவுக்கு அவர்கள் ஆதரவு அளித்ததாக Datuk Seri Rafizi Ramli தெரிவித்துள்ளார்.


Datuk Seri Rafizi Ramli mendakwa Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim memarahinya selama 20 minit sewaktu mesyuarat Majlis Pimpinan Pusat PKR kerana isu pemilihan parti. Rafizi mendakwa kemarahan Anwar menjadi punca beliau kehilangan sokongan kepimpinan parti.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *