ஈரான் - இஸ்ரேல் மோதல்! நிதானத்தைக் கடைபிடியுங்கள் - வெளியுறவு அமைச்சர் அறிவுறுத்து

- Shan Siva
- 23 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 23: மத்திய கிழக்கில் நிலைமை மேலும் மோசமடைவதைத்
தவிர்க்க, அதிகபட்ச
நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமது ஹசான்
அனைத்து தரப்பினரையும் வலியுறுத்தியுள்ளார்.
துருக்கியின்
இஸ்தான்புல்லில் நடைபெற்ற இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) வெளியுறவு அமைச்சர்கள் குழுவின் 51வது அமர்வின் போது, ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சியுடனான
சந்திப்பின் போது முகமது ஹசான் இதனைத் தெரிவித்தார்.
கடந்த ஜூன் 13 ஆம் தேதி இஸ்ரேல் இராணுவம் அணுசக்தி
நிலையங்கள் உட்பட ஈரான் முழுவதும் பல இடங்களில் வான்வழித் தாக்குதல்களை
நடத்தியபோது பதட்டங்கள் வெடித்தன. இது தெஹ்ரானை பதிலடி கொடுக்கத் தூண்டியது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா மூன்று ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தியது, இது உலகம் முழுவதும் அச்சத்தையும் கண்டனத்தையும் எழுப்பியுள்ளது!
Menteri Luar Malaysia, Datuk Seri Mohamad Hasan menyeru semua pihak di Timur Tengah agar bertenang dan elak konflik berlarutan. Beliau menyuarakan kebimbangan itu semasa mesyuarat OIC, susulan ketegangan antara Iran, Israel dan tindakan Amerika Syarikat.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *