வெளிநாட்டுத் தொழிலாளர் அனுமதிகளைப் பெறுவதில் மோசடி! - ஐவர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 24: மனிதவள மறுசீரமைப்பு திட்டம் 2.0 இன் கீழ் வெளிநாட்டு தொழிலாளர் அனுமதிகளைப் பெறுவதற்காக மோசடி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், நான்கு நிறுவன இயக்குநர்கள் உட்பட ஐந்து பேரை மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான MACC கைது செய்துள்ளது.

20 முதல் 60 வயதுடைய சந்தேக நபர்கள் நேற்று பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை சிலாங்கூர் MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளித்தபோது கைது செய்யப்பட்டதாக ஒரு வட்டாரம் தெரிவித்தது.

2023 மற்றும் 2024 க்கு இடையில் சிலாங்கூர் குடிநுழைவுத் துறைக்கு அளித்த விண்ணப்பங்களில் இந்தக் குழு தவறான தகவல்களை வழங்கியதாக விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இதனை அடுத்து, ஷா ஆலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முகமது ரெட்ஸா அசார் ரெசாலி, சந்தேக நபர்களுக்கு இன்று முதல் நான்கு நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற மூன்று நபர்கள் உடல்நலக் காரணங்களுக்காக இரு நபர் உத்தரவாதங்களுடன் 10,000 ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்!

Lima individu, termasuk empat pengarah syarikat, ditahan SPRM kerana disyaki menyerahkan dokumen palsu untuk permit pekerja asing di bawah program HR Recalibration 2.0. Mahkamah mengarahkan tahanan reman empat hari bagi siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *