பண்டிகை காலங்களில் அத்தியாவசிய பொருட்களின் விலை 400% உயர்வு-PHA.

- Muthu Kumar
- 13 Jan, 2025
சீனப் புத்தாண்டு மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் 400% வரை உயர்ந்துள்ளதாக பினாங்கு இந்து சங்கம் (PHA) தெரிவித்துள்ளது.
தங்களுடைய சங்க உறுப்பினர்களிடமிருந்து பல புகார்களை பெற்றுள்ளதால் பல்வேறு சில்லரை விற்பனை நிலையங்களில் விலைகளை சீரற்ற முறையில் ஆய்வு செய்ய தாங்கள் முடிவு செய்துள்ளதாக ஒரு அறிக்கையின் வாயிலாக PHA தலைவர் பி முருகையா தெரிவித்துள்ளார்.
“கடந்த அக்டோபரில் தாங்கள் ஆய்வு செய்த பொருட்களின் விலைகளுடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மசாலாப் பொருட்களின் விலைகள் அபரிமிதமான அதிகரிப்பைக் கண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஏழு பொருட்களின் விரைவான கணக்கெடுப்பின் படி தக்காளியின் விலை கிலோ ஒன்றுக்கு RM1.60 லிருந்து RM8.00 ஆக உயர்ந்துள்ளதாகவும்,விலை RM6.40 அதிகரித்துள்ளது. இது 400% உயர்வாகும்,'' என்றார்.PHA இன் கணக்கெடுப்பில் ஏழு பொருட்களும் கடந்த அக்டோபரில் அதன் விலையுடன் ஒப்பிடும்போது 50%க்கும் அதிகமான விலை உயர்வைக் காட்டியதாக முருகையா கூறினார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளைப் பூண்டு ஒரு கிலோவுக்கு RM5ல் இருந்து RM14.50 ஆக உயர்ந்து, RM9.50 (190%) அதிகரித்துள்ளத அதே நேரத்தில் இந்தியாவில் இருந்து ஏலக்காய் ஒரு கிலோவுக்கு RM92.10லிருந்து RM220 ஆக உயர்ந்து, RM127.90 அதிகரித்துள்ளது. (139%) என்றும் தெரிவித்தார்.
“பண்டிகைக் காலங்களில் பிரபலமாக இருக்கும் கறுப்பு எள், கிலோ ஒன்றுக்கு RM10ல் இருந்து RM19.50 ஆக, 95% அதிகரித்துள்ளது.தேங்காய்ப் பாலும் ஒரு கிலோவிற்கு RM9 இலிருந்து RM15 ஆக உயர்ந்துள்ளது, இது RM6 அல்லது 66.7% அதிகரிப்பு ஆகும் என்றார் அவர்.
பச்சை காபியின் விலையும் பாதிக்கப்பட்டுள்ளது, 200 கிராம் புரூ காபி பாக்கெட் முன்பு RM13.50க்கு விற்கப்பட்டது, RM21.00க்கு சென்றது. அதாவது RM7.50 அல்லது 55.5% அதிகரிப்பு,” என்றார்.
முருகையா கூறுகையில், பிப்ரவரி நடுப்பகுதியில் தைப்பூசம் கொண்டாடப்பட உள்ளதால், தேங்காய்களின் விலையும் கடந்த அக்டோபரில் ஒரு தேங்காய் ஒன்றுக்கு RM1.60 இலிருந்து ஜனவரி வரை RM2.60 (62.5%) ஆக நிலையான அதிகரிப்பைக் கண்டுள்ளது. மொத்தமாக கொள்முதலுக்கு கேட்கும் போது, சில்லறை விற்பனையாளர்களும் மட்டை தேங்காய்களுக்கு பற்றாக்குறை இருப்பதாக கூறுகின்றனர்.இது கொண்டாட்டங்களுக்கு முன் பதுக்கல் சாத்தியம் பற்றிய கேள்வியை எழுப்புகிறது," என்று முருகையா கூறினார்.
முருகையா கூறுகையில், சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்கள் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதி வரிகள் அதிகரித்ததே விலை ஏற்றத்திற்கு காரணம் என்று கூறுவதாக முருகையா தெரிவித்தார்.
"சில்லறை விற்பனையாளர்களால் 15% முதல் 20% வரை லாபம் பெறுவது நியாயமானதாகக் கருதப்படும்போது, சிலர் 40% முதல் 60% வரை பெறுவதைத் தேர்வு செய்கிறார்கள்."இந்த நடவடிக்கை பெரும்பாலும் B40 குழுவை பாதித்துள்ளது, அவர்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைச் சமாளிக்க சிக்கன நடவடிக்கையை மேற்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை," என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *