ஜொகூர் மூவாரில் வெ.10 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்-ஏஎஸ்பி ஜீவேந்திரன் அதிரடி!

- Muthu Kumar
- 26 Jun, 2025
(இரா.கோபி)
ஜொகூர்பாரு, ஜூன் 26-
ஜொகூர் மாநிலத்தில் போலீஸார் போதைப்பொருள் நடவடிக்கைகளை வெற்றிகரமாக முறியடித்து வருகின்றனர். அந்த வகையில் இம்மாதம் 16ஆம் தேதி பிற்பகல் 4 மணி முதல் இரவு 10 மணிவரை மூவார் புக்கிட் திரே பகுதியில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர் என்று மூவார் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி ராய்ஸ் முஹ்லிஸ் அஸ்மான் அஸிஸ் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர்களின் வீடுகளில் சோதனையிட்டதில் எக்ஸ்டாசி போதை மருந்து தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 10 லட்சம் வெள்ளி என்று அவர் கூறினார். கைது செய்யப்பட்ட ஓர் ஆடவருக்கு 3 போதைப்பொருள் குற்றப் பதிவுகளும் மற்றொருவருக்கு 5 போதைப்பொருள் குற்றப் பதிவுகளும் உள்ளதாக அவர் கூறினார்.
இந்த சோதனை நடவடிக்கை மூவார் மாவட்ட ஏஎஸ்பி ஜீவேந்திரன் சன்னாசி தலைமையில் நடத்தப்பட்டது என்றார் அவர்.பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்களின் எடை 6.389 கிராம். அதன் மதிப்பு 10 லட்சத்து 66 ஆயிரத்து 963 வெள்ளி ஆகும்.
மேலும் அந்த வீட்டிலிருந்து போதைப்பொருள் தயாரிக்கும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட நபர்கள் பயன்படுத்திய பெரோடுவா மைவி கார். இதன் மதிப்பு 13,000 வெள்ளி, யமஹா மோட்டார் சைக்கிள் ஒன்று, இதன் மதிப்பு 7,000 வெள்ளி போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்கள் செக்ஷன் 39பி பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தூக்குத் தண்டனை அல்லது வாழ்நாள் சிறையுடன் பிரம்படியும் வழங்குவதற்கு சட்டத்தில் இடம் உள்ளதாக அவர் கூறினார்.
மூவார் மாவட்டத்தில் போதைப்பொருள்
விநியோகம் அல்லது போதைப்பொருள் உட்கொள்பவர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக 06-9526001 என்ற எண்ணில் மூவார் போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
Dua lelaki ditahan polis di Muar, Johor kerana terlibat dalam pengedaran dadah jenis ekstasi bernilai lebih RM1 juta. Bahan dan kenderaan turut dirampas. Mereka disiasat di bawah Seksyen 39B yang memperuntukkan hukuman mati atau penjara seumur hidup.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *