நடிகர் தனுஷின் இட்லி கடை படத்தில் இணைந்த அருண் விஜய்!

- Muthu Kumar
- 02 Feb, 2025
நடிகர் தனுஷின் இயக்கத்தில் மட்டுமே இந்த ஆண்டில் 2 திரைப்படங்கள் வெளியாக உள்ளது. இவர் இறுதியாக தான் இயக்கிய ராயன் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அண்ணன், தங்கை உறவை மையப்படுத்திய ஆக்ஷ்ன் கதைக்களத்துடன் இப்படம் இருந்தது. இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து இளம் நடிகர்களை வைத்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார். இப்படத்தில் தனுஷின் சகோதரியின் மகன் பவிஷ் என்பவர் மூன்று ஹீரோக்களில் ஒரு கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் அனிகா சுந்தரேசன்,பிரியா வாரியர் மற்றும் மேத்யு தாமஸ் எனப் பல இளம் பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படமானது முதலில் பிப்ரவரி 6ம் தேதியில் வெளியாகும் என்று கூறியிருந்த நிலையில், நடிகர் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தின் ரிலீஸ் காரணமாகப் பிப்ரவரி 21ம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியது. இந்நிலையில் இப்படத்தைத் தொடர்ந்து இட்லி கடை என்ற திரைப்படத்தை நடிகர் தனுஷ் இயக்கியும் அதில் நடித்தும் வந்தார். தற்போது நடிகர் அருண் விஜய்யும் இப்படத்தில் இணைந்துள்ளார்.
ராயன் திரைப்படத்தைத் தொடர்ந்து, தனுஷ் இயக்கி நடித்துவரும் திரைப்படம் இட்லி கடை.
இந்த திரைப்படத்தின் அறிவிப்புகள் கடந்த ஆண்டு வெளியான நிலையில் இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. இந்நிலையில் இப்படத்தில் படப்பிடிப்புகள் 80% சதவீதம் நிறைவடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தனுஷ் இயக்கும் இப்படத்தை டான் பிக்சர்ஸுடன் இணைந்து வுண்டர்பார் ஃபிலிம்ஸின் கீழ் நடிகர் தனுஷ் தயாரித்து வருகிறார். மேலும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தைப் போல இப்படத்திலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார்.
சமீபத்தில் இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த போஸ்டரில் நடிகர் ராஜ்கிரணுடன், தனுஷ் இருப்பது போல இருந்தது. இதை அடுத்தாக நடிகர் நித்யா மேனனுடன் இருக்கும் புகைப்படங்களும் இணையத்தில் தீயாகப் பரவி வந்தது. இப்படத்தில் நடிகர் தனுஷுடன் நித்தியா மேனன், ராஜ்கிரண்,ஷாலினி பாண்டே,பிரகாஷ் ராஜ், சமுத்திரக்கனி மற்றும் தற்போது நடிகர் அருண் விஜய்யும் இணைந்துள்ளார்.
இந்த திரைப்படமானது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதைகளுடன் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த திரைப்படமானது வரும் ஏப்ரல் மாதம் 10ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் நடிகர் அருண் விஜய்யும் இப்படத்தில் இணைந்துள்ள நிலையில், யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. மேலும் இவர்கள் இருவரின் காம்போ நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *