மார்கோ பாகம் 2ல் வில்லனாக மிரட்ட வருகிறாரா சீயான் விக்ரம்!

top-news
FREE WEBSITE AD

மலையாளத்தில் வளர்ந்துவரும் நடிகராக அடுத்தடுத்த படங்களில் மாஸ் காட்டி வருகிறார் உன்னி முகுந்தன். அவரது நடிப்பில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்று வருகிறது மார்கோ. அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் அதிகமான வன்முறை காட்சிகளுடன் மார்கோ படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

ஆனாலும் ரசிகர்களை கவரும் அதிகமான விஷயங்கள் இந்தப் படத்தில் உள்ளதால் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து கல்லா கட்டிவரும் மார்கோ படம் கொரியாவிலும் ரிலீஸ் செய்யப்பட்டு அதிகமான வரவேற்பையும் வசூலையும் குவித்து வருகிறது.

வித்தியாசமான படங்களை கொடுத்துவரும் ஹனீப் அதேனி இயக்கத்தில் உருவாகியுள்ள மார்கோ படம் தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது. முன்னதாக மம்முட்டி -ஆர்யா கூட்டணியில் தி கிரேட் பாதர் என்ற படத்தை கொடுத்துள்ள ஹனீப் தொடர்ந்து, நிவின் பாலியை வைத்து இரு படங்களை கொடுத்துள்ளார். மார்கோ படம் சிறப்பான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான வேலைகள் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது பாகத்தில் பவர்புல்லான வில்லனாக நடிகர் விக்ரம் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வித்தியாசமான கதைக்களங்களில் தன்னை இணைத்துக் கொள்வதில் சிறப்பாக செயல்பட்டுவரும் சியான், மார்கோ 2வில் இணைந்தால் அது பெஸ்ட் காம்பினேஷனாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து முடித்துள்ளார் விக்ரம். அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அருண்குமார் இயக்கியுள்ள நிலையில், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் படத்தில் இணைந்துள்ளனர்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *