RM170 மில்லியன் சொத்துக் குவிப்பு விசாரணை! Ismail Sabri கைது செய்யப்படுவாரா? Tan Sri Azam Baki விளக்கம்!

top-news

ஜூன் 25,


முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob மீதான RM170 மில்லியன் சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும் முழுமையான விசாரணை அறிக்கையைத் துணை அரசு வழக்கறிஞரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki இன்று தெரிவித்தார். Datuk Seri Ismail Sabri Yaakob லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதால் விரைந்து இந்த வழக்கின் விசாரணையை முடிக்க முடிந்ததாக Tan Sri Azam Baki தெரிவித்தார்.

கடந்த மார்ச் மாதம் சிலாங்கூரில் உள்ள ஒரு SAFE HOUSEலிருந்து RM170 மில்லியன் ரொக்கத்தையும், கிட்டத்தட்ட RM7 மில்லியன் மதிப்புள்ள 16 கிலோகிராம் தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்த லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையம் அதன் மீதான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் ஒரு பகுதியாக மட்டுமே முன்னாள் பிரதமர் Datuk Seri Ismail Sabri Yaakob விசாரிக்கப்பட்டதாகவும் Tan Sri Azam Baki விளக்கமளித்தார். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட RM170 மில்லியன் ரொக்கத்தையும், RM7 மில்லியன் மதிப்பிலான 16 கிலோகிராம் தங்கக் கட்டிகளையும் SPRM கையகப்படுத்துவதற்காக அரசுத் தரப்பிடம் விண்ணப்பித்திருப்பதாகவும் லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.


SPRM telah menyelesaikan siasatan terhadap bekas Perdana Menteri Ismail Sabri berkaitan pemilikan RM170 juta dan 16kg jongkong emas. Laporan penuh diserah kepada Timbalan Pendakwa Raya dan SPRM sedang memohon untuk melucut hak aset tersebut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *