தனிநபர் பயிற்சியாளராக இஸ்கந்தர் ஜைனுதீன் தேர்வு!

- Muthu Kumar
- 02 Jul, 2025
கோலாலம்பூர், ஜூலை 2-
மலேசிய பூப்பந்து சங்கம், முன்னாள் தேசிய ஆண்கள் தனிநபர் வீரரான இஸ்கந்தர் ஜைனுதீனை தனிநபர் பயிற்சியாளராக நியமித்துள்ளது. 33 வயதான இவர், அக்டோபர் 1 முதல் மகளிர் தனிநபர் பிரிவின் தலைமை பயிற்சியாளராகப் பொறுப்பேற்பார் என்று மலேசியப் பூப்பந்து சங்கத்தின் தலைவர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் உறுதிப்படுத்தினார்.
இஸ்கந்தர், 2022 முதல் அயர்லாந்து பேட்மிண்டன் அணியின் தனிநபர் பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். அவரது வழிகாட்டுதலில், அயர்லாந்து வீரர் நாட் நுயென் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016ஆம் ஆண்டு மலேசிய மாஸ்டர்ஸ் இறுதிப் போட்டியாளரான இஸ்கந்தர், 2009 உலக இளையோர் போட்டியில் இறுதிப் போட்டியாளராகவும். 2018 ஆம் ஆண்டு தோமஸ் கோப்பையில் மலேசியாவைக் காலிறுதிக்கு அழைத்துச் சென்றவராகவும் இருந்தவர்.
மலேசியப் பூப்பந்து சங்கத்தின் இந்த நியமனம். ஏப்ரல் மாதம் மகளிர் தனிநபர் பயிற்சியாளர் ஜெபர் ரோசோபின் திடீர் ராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த பதவியை நிரப்புவதற்காகும்.
இந்த நியமனம் மலேசிய பேட்மிண்டன் ரசிகர்களிடையே புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது, மேலும் இஸ்கந்தரின் தலைமையில் மகளிர் தனிநபர் பிரிவு புதிய உயரங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
Iskandar Zainuddin dilantik sebagai ketua jurulatih perseorangan wanita bermula 1 Oktober oleh Persatuan Badminton Malaysia. Bekas pemain kebangsaan ini pernah melatih pasukan Ireland dan dijangka beri nafas baharu kepada skuad wanita negara.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *