லஞ்சம் பெற்ற 41 வயது அதிகாரி கைது! - SPRM அதிரடி!
- Thina S
- 21 May, 2024
கடந்த 2018 முதல் 2022 வரையில்
சுமார் 30 வெளிநாட்டினரைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குள் அனுமதித்ததாக நம்பப்படும்
41 வயதான Razali
Ahmad எனும்
குடிநுழைவுத் துறை அதிகாரியை லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமான SPRM கைது செய்தது. கைது செய்யப்பட்ட ஆடவர் SESYEN நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தியதாக லஞ்ச
ஊழல் தடுப்பு ஆணையமான SPRM தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினர்களிடம் தலா 1600
முதல் 4200 ரிங்கிட் வரையில் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ள
நிலையில் அதற்கான விசாரணையைத் தொடர SESYEN நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 41 வயதான அதிகாரியின்
வங்கியிலிருந்து ஒவ்வொரு மாதமும் வைப்புத் தொகைக்கும் அதிகமான பணப்பரி வர்த்தனைகள்
மேற்கொள்ளப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்கள் வழங்கிய ஆதாரத்தின்
அடிப்படையாகக் கொண்டு 41 வயதான Razali Ahmad எனும் குடிநுழைவுத்
துறை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையமமான SPRM தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *