Syed Saddiq விடுதலையை எதிர்த்து SPRM மேல்முறையீடு செய்யும்! – AZAM BAKI!

- Sangeetha K Loganathan
- 25 Jun, 2025
ஜூன் 25,
RM 10 லட்சம் ரிங்கிட் ARMADA பணமோசடி சம்மந்தப்பட்ட வழக்கிலிருந்து மூடா கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் அமைச்சருமான Syed Saddiq Syed Abdul Rahman விடுவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார். முன்னதாகக் கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அவருக்கு இதே வழக்கில் 7 ஆண்டுகள் சிறையுடன் 2 பிரம்படி தண்டனையையும் விதித்திருந்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் Syed Saddiq Syed Abdul Rahman மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டில் 3 நீதிபதிகளும் Syed Saddiq Syed Abdul Rahman மீதான தண்டனையை இன்று ரத்து செய்தனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அரசு தரப்பிலிருந்து முழுமையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என Tan Sri Azam Baki வலியுறுத்தியதுடன் இன்று Syed Saddiq Syed Abdul Rahman விடுவிக்கப்பட்டிருப்பதை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாகவும் அரசு தரப்பு சாட்சியங்களையும் ஆதாரங்களையும் கூட்டரசு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் மலேசிய லஞ்ச ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை இயக்குநர் Tan Sri Azam Baki தெரிவித்தார்.
SPRM akan memfailkan rayuan di Mahkamah Persekutuan terhadap pembebasan Syed Saddiq daripada kes penyelewengan dana RM10 juta ARMADA. Azam Baki menegaskan siasatan penuh dan bukti akan dikemukakan bagi mencabar keputusan Mahkamah Rayuan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *