எஸ்டி பிளான்டேஷன் புதிய ஆற்றலுடன் பசுமை தொழில்துறை பூங்காவில் ஈடுபாடு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 8-
சைம் டார்பி பிளான்டேஷன் மலேசியாவில் உள்ள அதன் பரந்த நில இருப்புகளைப் பயன்படுத்தி பேராக்கில் உள்ள முன்மொழியப்பட்ட கெரியன் ஒருங்கிணைந்த பசுமைத் தொழில் பூங்காவில் இணைய திட்டமிடப்பட்டுள்ளது.
எஸ்டி பிளான்டேஷன் அதன் மிகப்பெரிய பங்குதாரரான பெர்மோடாலான் நேஷனல், இந்த 1,000 ஏக்கரின் வளர்ச்சியில் ஒத்துழைக்க உத்தேசித்துள்ளது. இது பேராக்கில் உள்ள எஸ்டி பிளான்டேஷனின் தாலி அயேர் தோட்டத்தில் முதன்மையாக அமைந்துள்ளது. 
கடந்த பிப்ரவரி மாதம் முதலீடு, வர்த்தகம், தொழில்துறை அமைச்சிடம் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டது.
நாட்டிற்குள் பசுமை மின்சாரம், மின்னணுவியல் முதலீட்டை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கிகிப், 2024 வரவு செலவு திட்டத்தில் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
உலகப் பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் இரண்டு துறைகளான செமிகண்டக்டர், இ&இ முதலீட்டை ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 660 ஏக்கர் சூரியப் பண்ணையை இந்தப் பகுதிக்கான பசுமை ஆற்றலின் முக்கிய ஆதாரமாக நிறுவுவதும் இந்தத் திட்டத்தில் அடங்கும்.
எஸ்டி பிளான்டேஷன் குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் டத்தோ முகமட் ஹெல்மி ஒத்மான் பாஷா, தோட்டத்தின் இயற்கைச் சூழலை ஆராயும் போது கிகிப்பின் வளர்ச்சியில் தீவிரமாகப் பங்குகொள்ளும் தீர்மானம் நிறுவனத்திற்கு ஒரு முக்கியமான மைல்கல் என்று கூறினார்.
நிலத்தை மிகவும் பொருத்தமான முறையில் அபிவிருத்தி செய்வதற்கு ஒரு கூட்டுறவை உருவாக்குவோம். அதன் மூலம் புதிய, நிலையான வருவாய் வழிகளை உருவாக்குவோம் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
நில இருப்பு, வலுவான இருப்புநிலையைக் கொண்டிருப்பதால், நிறுவனம் இந்த துறையில் விரிவடைவதற்கு நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *