போதைப்பொருள் வழக்கில் ஆதாரமில்லாததால் மூவர் விடுதலை!

- Sangeetha K Loganathan
- 25 Jun, 2025
ஜூன் 25,
போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவர் மீது தகுதியான ஆதாரங்கள் இல்லாததால் இன்று உயர்நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தது. கடந்த 2019 நவம்பர் 17 ஈப்போவில் உள்ள Taman Pinji Seni குடியிருப்புப் பகுதியில் இரவு 7.45 மணிக்கு 1.14 கிலோ எடையிலான KANABIS போதைப்பொருளுடன் 35 வயது Mohd Nazreen Hazim, 42 வயது Mohd Suhaimi Ahmad, 38 வயது Shafiq Shamsuddin ஆகிய மூவரும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களைக் கைது செய்த போது பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் அளவீட்டில் 90 கிராம் குறைவாக இருப்பதாகவும் சம்மந்தப்பட்டிருக்கும் மூவர் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதற்கான எந்தவோர் ஆதாரத்தையும் அரசு தரப்பிலிருந்து பெறாத நிலையில் குற்றம்சாட்டப்பட்ட மூவரையும் விடுதலை செய்வதாக உயர் நீதிமன்ற நீதிபதி Datuk Bhupindar Singh தீர்ப்பளித்தார்.
Tiga lelaki yang dituduh terlibat dalam penjualan kanabis seberat 1.14kg dibebaskan oleh Mahkamah Tinggi selepas didapati tiada bukti mencukupi. Mahkamah memutuskan bahan bukti kurang berat dan tiada penglibatan langsung mereka dalam urus niaga dadah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *