முஸ்லிம் அல்லாத நாடுகள் முஸ்லிம்களிடம் வெறுப்பைக் காட்டுவது வருத்தமளிக்கிறது! - அன்வார்
- Shan Siva
- 14 May, 2024
இஸ்லாமிய உலகிற்கு ஒளிமயமான
எதிர்காலத்தைத் திட்டமிட கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மனிதநேயம் மற்றும்
நேர்மையின் விழுமியங்களை நிலைநிறுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும் என்று
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அழைப்பு விடுத்துள்ளார்.
ஹமாத் பின் கலீஃபா
பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில், கத்தார் தேசிய நூலகத்தில் 'இஸ்லாமிய உலகின் எதிர்காலம்' என்ற தலைப்பில் பொது விரிவுரையை நிகழ்த்திய போது அன்வார் இதனைத் தெரிவித்தார்.
இஸ்லாமிய வெறுப்பு, பாகுபாடு மற்றும் உலகளாவிய வல்லரசுகளின் பாசாங்குத்தனம்
போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள இஸ்லாமிய உலகத் தலைவர்கள் தங்கள் முயற்சிகளை
ஒன்றிணைக்க வேண்டியதில் உள்ள சவால்கள் மற்றும் இன்னல்கள் குறித்தும் தாம் பேசியதாக
தமது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லிம்கள் பகுத்தறிவுடன்
இருக்க வேண்டும் மற்றும் அறிவு, ஒழுக்கம், மனித கண்ணியம் மற்றும் இறையச்சம் ஆகியவற்றின் அடிப்படையில்
வலிமையின் வேர்களுக்குத் திரும்ப வேண்டும், இது இஸ்லாம் மற்றும் கிழக்கு கலாச்சாரத்தின் போதனைகளை அடிப்படையாகக் கொண்டது என்று
கூறீயதாக பதிவிட்டுள்ளார்.
பல முஸ்லிமல்லாத நாடுகள் தங்கள் நாடுகளில் முஸ்லிம் சிறுபான்மையினர் மீது இவ்வளவு வெறுப்பையும் அநீதியையும் காட்டுவது மிகவும் வருத்தமளிக்கிறது என்றும் அவர் ஒப்புக்கொண்டார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *